நெல்லையில் முதியோர் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக பேட்டரி கார் சேவை

நெல்லையில் முதியோர், மாற்றுத்திறனாளி வசதிக்காக பேட்டரி கார் சேவையை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கி வைத்தார்.
நெல்லை,
நெல்லை கொக்கிரகுளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக பேட்டரி கார் சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. கொக்கிரகுளம் பஸ் நிறுத்தத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பேட்டரி கார் சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் அவரே முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை காரில் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தார். அப்போது கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தினந்தோறும் 250 முதல் 500 பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் திங்கட்கிழமைகளில் 700 முதல் 1000 பொதுமக்கள் வரையிலும் பல்வேறு கோரிக்கைகளுக்காக வருகிறார்கள்.
முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் கலெக்டர் அலுவலகத்துக்கு வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேவையான சக்கர நாற்காலிகள் ஏற்கனவே வைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.
இருப்பினும், பஸ் நிறுத்தத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சுமார் 150 மீட்டர் தூரம் உள்ளது. முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நடந்துவர சிரமப்படுகிறார்கள். அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், பஸ் நிறுத்தத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வரவும், திரும்பவும் பஸ் நிறுத்தத்தில் கொண்டு சென்று விடும் வகையில் பேட்டரி கார் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தனியார் பங்களிப்பில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
இதற்கென தனி டிரைவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் இந்த சேவை நடைபெறும். முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து, தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயன்படுத்தும் வகையில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தரம்பிரித்து கையாளும் வகையில், வைக்கப்பட உள்ள 17 குப்பை தொட்டிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சக்திமுருகன், பாளையங்கோட்டை தாசில்தார் கந்தசாமி, தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story