கூட்டுறவு சங்கங்களில் வேட்புமனுக்கள் வாங்க அதிகாரிகள் வராததை கண்டித்து போராட்டம்
கும்பகோணம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் வேட்புமனுக்கள் வாங்க அதிகாரிகள் வராததை கண்டித்து தி.மு.க. மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் வேட்புமனுக்களை வாங்க தேர்தல் நடத்தும் அதிகாரி ரவிக்குமார் மதியம் 12 மணி வரை சங்க அலுவலகத்துக்கு வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க. மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடையாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேட்புமனுக்களை வாங்க அதிகாரிகள் வரவில்லை. இதையடுத்து தி.மு.க.வினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமையில் வேட்பு மனு வாங்க வராத அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் தாராசுரம், மருதாநல்லூர், சோழபுரம், தேவனாஞ்சேரி, கொரநாட்டு கருப்பூர், களம்பரம் ஆகிய இடங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களிலும் தேர்தல் அதிகாரிகள் வேட்பு மனுக்களை வாங்க வரவில்லை. இதை கண்டித்து தி.மு.க மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்நோக்கம்
இந்த நிலையில் அன்பழகன் எம்.எல்.ஏ., தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் தி.மு.க.வினர் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சன்னதி தெருவில் உள்ள துணைப்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று வேட்புமனுக்களை வாங்காதது குறித்து முறையிட்டனர். அப்போது அங்கு இருந்த ஊழியர்கள், துணைப்பதிவாளர் அலுவலகத்தில் இல்லை என கூறினர். இதையடுத்து வேட்புமனுக்கள் வாங்க அதிகாரிகள் வராததை கண்டித்து, தி.மு.க.வினர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுகுறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
கூட்டுறவு சங்க தேர்தல் களில் ஆளும் கட்சியினரின் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை. வேட்பு மனுக்களை வழங்க காலை முதல் சங்கத்தின் உறுப்பினர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், செயலாளர்கள் சங்கத்துக்கு வரவில்லை. இதில் உள்நோக்கம் உள்ளது. ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களிலும் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ளன. தேர்தலை நியாயமாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரகசிய இடத்தில் வேட்புமனு தாக்கல்?
வேட்பு மனுதாக்கலையொட்டி கூட்டுறவு சங்கங்களுக்கு நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் போராட்டங்கள் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்களிடம் மட்டும் வேட்பு மனுக்கள் ரகசிய இடத்தில் வாங்கப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் குற்றம் சாட்டினர்.

Related Tags :
Next Story