மத்திய அரசு மீது அ.தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் சரத்குமார் பேட்டி


மத்திய அரசு மீது அ.தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் சரத்குமார் பேட்டி
x
தினத்தந்தி 27 March 2018 4:15 AM IST (Updated: 27 March 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு மீது அ.தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என சரத்குமார் கூறினார்.

காரைக்கால்,

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காரைக்கால் வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நீர் டெல்டா பகுதிக்கு மிக அவசியம். எனவே தான் காவிரி உரிமை மீட்பு பேரணியை மேட்டூரில் இருந்து மயிலாடுதுறை வரை நடத்தினேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என காரைக்கால் அம்மையார் மற்றும் சனிபகவானிடம் வேண்டி கொண்டேன்.

சாமி தரிசனம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அழுத்தம் கொடுக்க மத்திய அரசு மீது அ.தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அழுத்தம் தந்தால் மட்டுமே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருநள்ளாறு சனிபகவான் கோவில், காரைக்கால் அம்மையார் கோவிலில் சரத்குமார் சாமி தரிசனம் செய்தார். 

Next Story