தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதுதான் முக்கியம் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
மேலாண்மை வாரியமா?, மேற்பார்வை வாரியமா? என்பது முக்கியமல்ல தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பது தான் முக்கியம் என்று தஞ்சையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை தெற்கு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தஞ்சை மாவட்ட தலைவர் ராஜா, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ்.விநாயகம், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராமலிங்கம், கோட்ட பொறுப்பாளர் வரதராஜா, இணை பொறுப்பாளர் கண்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகர தலைவர் விநாயகம் வரவேற்றார். இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார். முடிவில் மாவட்ட செயலாளர் ஜெய்சதீஷ் நன்றி கூறினார். இதில் கோட்ட பொறுப்பாளர்கள், மகளிர் அணி, மாவட்ட மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சைக்கு நல்ல பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நவீன நகரமாக தஞ்சை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் பல கோடி ரூபாய்க்கான கட்டமைப்பு தஞ்சைக்கு கிடைக்கும். அதுமட்டும் அல்ல, தஞ்சை மருத்துவகல்லூரியில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.
பா.ஜனதா ஆக்கப்பூர்வமான அரசியலையும், வளர்ச்சியையும் முன்னெடுத்து செல்கிறது. ஆனால் இதே தஞ்சை மாவட்டத்தில் மக்களை பின்னோக்கி எடுத்துச்செல்லும் அரசியலும் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நேற்றைய தினம்(அதாவது நேற்று முன்தினம்) நடந்த உண்ணாவிரதம் தஞ்சையில் வேடிக்கையாக நடத்திருக்கிறது. தஞ்சையில் நடந்தது உண்ணாவிரதமா? உண்ணும் விரதமா? என்று தெரியாதபோது, அதை வெளிப்படுத்த முயன்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டது தவறான நடவடிக்கை.
தஞ்சையில் இன்னும் 3 மாதத்தில் விமான சேவை தொடங்க இருக்கிறது. 50 சதவீத மானியத்தில் குறைந்த வருவாய் உள்ளவர்களும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
தஞ்சையை மையப்படுத்தி வளர்ச்சிப்பணிகள் இருக்கும்போது வளர்ச்சியே இல்லாத சோமாலியா நாடு போல தமிழகம் மாறிவிடும் என்று கூறியிருப்பது தவறான கருத்து. டி.டி.வி.தினகரன் அப்படிப்பட்ட கருத்தை சொன்னது மிகப்பெரிய தவறு. வளர்ச்சியின் கட்சியாக பா.ஜனதா உள்ளது.
காவிரி பிரச்சினை தஞ்சையில் பல ஆண்டுகளாக உள்ளது. இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதுதான் பா.ஜனதாவின் அடிப்படை கொள்கை. இதை மத்திய தலைமையிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். உச்ச நீதிமன்றம் கொடுத்த காலக்கெடுவுக்குள் நிச்சயமாக நமக்கு காவிரியில் உரிமை கிடைக்கும்.
மத்திய அரசு அதன் பணியை தொடங்கிவிட்டது. காவிரி மேலாண்மை வாரியமா?, மேற்பார்வை வாரியமா? என்பது முக்கியமல்ல. தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கிடைக்கவேண்டும் என்பது தான் முக்கியம். உச்சநீதிமன்றம் தெரிவித்த வரையறைகளின் படி மத்திய அரசு செயல்படுகிறது. இந்த பணிகள் குறித்த காலவரையறைக்குள் நடைபெற வேண்டும் என்பதற்காக தான் 3 பேர் கொண்ட குழு டெல்லி செல்கிறது.
காவிரி பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு தி.மு.க. தான் காரணம். காங்கிரஸ் கட்சியினருடன் கூட்டணி வைத்துக்கொண்டு தி.மு.க கட்சியினர் காவிரியை விட்டுக்கொடுத்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story