அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
‘அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது’ என்று கோவையில் நடந்த விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
கோவை,
ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளையொட்டி ஏழை ஜோடிகளுக்கு கோவை தொண்டாமுத்தூரில் நேற்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
தமிழக அரசின் ஒரு ஆண்டு கால ஆட்சியை சில எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. ஆனால் இந்த ஒரு ஆண்டு காலத்தில் எந்த ஆட்சியிலும் செய்ய முடியாத சாதனைகளை முதல்-அமைச்சர் செய்துள்ளார். ஆர்.கே.நகரில் தி.மு.க.வுக்கு டெபாசிட்போய் விட்டது. அதை தக்க வைத்துக் கொள்வதற்காக ஈரோட்டில் தி.மு.க.வினர் மண்டல மாநாடு நடத்தினார்கள்.
ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ., உண்ணாவிரதம் இருக்கிறார். அவர் தமிழ்நாட்டில் எங்கு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினாலும் அதில் குறிப்பிட்ட நபர்கள் தான் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் தான் அ.தி.மு.க. ஆட்சியை கலைத்து விடுவோம் என்று சொல்கிறார்கள். அது எந்த காலத்திலும், யாராலும் முடியாது.
மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் போன்று தமிழக முதல்-அமைச்சரோ, துணை முதல்-அமைச்சரோ கிடையாது. முதல்-அமைச்சர் கட்சியில் சாதாரண கிளை செயலாளராக இருந்து படிப்படியாக முன்னேறி இந்த நிலைமைக்கு வந்துள்ளார். துணை முதல்-அமைச்சரும் அப்படித்தான்.
ஆனால் மு.க.ஸ்டாலின் அவரது தந்தையால் தலைமை பொறுப்புக்கு வந்தவர். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது தினகரன் 10 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராகவே இல்லை. அவர் கட்சி ஆரம்பித்துள்ளார். அது அவ்வளவு தான். அத்துடன் முடிந்து விட்டது.
கோவை மாவட்டத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்-அமைச்சர் கேட்டவுடன் அளித்து வருகிறார். தமிழக அரசின் திட்டங்களை வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் பாராட்டி வருகிறார்கள். தமிழகத்தில் தினமும் நடத்தப்படும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை எதிர்த்து சட்டம்- ஒழுங்கை பேணிகாத்து முதல்-அமைச்சர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். 2 நடிகர்கள் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளனர். இத்தனை பிரச்சினைகளையும் சமாளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story