நம்மை எதிர்ப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள்: துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
நம்மை எதிர்ப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று கோவையில் நடந்த விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
கோவை,
கோவையை அடுத்த தொண்டாமுத்தூரில் நடந்த ஏழை ஜோடிகள் திருமண விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய ஆட்சிக்காலத்தில் 10,700 திருமணங்களை நடத்தியிருக்கிறார். திருமணம் செய்து வைப்பதை, மறைந்த முதல்-அமைச்சருக்கு செய்கின்ற பணியாக எண்ணி செய்து வரு கிறோம். பல தலைவர்கள் பிறந்த நாளை எப்படி ஆடம்பரமாக கொண்டாடி கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும்.
மறைந்த எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கி கட்டி காத்த அ.தி.மு.க.வை அழிக்க சிலர் துடிக்கின்றனர். நமக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பவருக்கு கிடைத்திருப்பது அணி. ஆனால் நமக்கு ஜெயலலிதாவின் ஆன்மா தந்திருப்பது கனி. இதயக்கனி. நம்மிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு கிடைத்திருப்பது அணி தான். அது தான் அவர்களுக்கு நிரந்தரமாக கிடைக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் நம்மை எதிர்ப்பவர்கள் காணாமல் போய் விடும் சூழல் உருவாகும். தன்னம்பிக்கையுடன் நீங்கள் செயல்பட்டால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
ஏழை சிறுவன் ஒருவன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த காரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். இதை கண்ட காரின் உரிமையாளர், அந்த சிறுவனை காரில் உட்கார வைத்து கொஞ்ச தூரம் காரை ஓட்டிக் காட்டினார். அப்போது அந்த சிறுவன் ‘வாகனம் மிகவும் அருமையாக இருக்கிறது என்ன விலை“ என்று கேட்டான். அதற்கு காரின் உரிமையாளர், தெரியவில்லை இது எனது சகோதரர் எனக்கு பரிசாக கொடுத்தது என்று கூறினார்.
அதற்கு அந்த சிறுவன் உங்கள் சகோதரர் மிகவும் நல்லவர் என்றான். உடனே காரின் உரிமையாளர் அந்தச் சிறுவனைப் பார்த்து நீ என்னை நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியும் உனக்கும் என் சகோதரனை போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று நினைக்கிறாய் அல்லவா என்று கேட்டார், அதற்கு அந்த ஏழை சிறுவன் ‘இல்லை. நான் உங்களின் சகோதரனை போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றான்.
அதாவது வாங்கக் கூடிய இடத்தில் இல்லாமல் கொடுக்கக் கூடிய இடத்தில் இருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தான். இந்த சிறுவனிடம் இருக்கும் தன்னம்பிக்கை உங்களிடம் இருந்தால் உங்கள் வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக அமையும். உங்களது இல்லற வாழ்க்கை சொர்க்கமாக அமைந்திடும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story