தடையை மீறி சட்டசபைக்குள் நுழைய முயன்ற பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்கள் தடுத்து நிறுத்தம்: காவலர்களுடன் வாக்குவாதம்-போராட்டம்
புதுவை சட்டசபையில் தடையை மீறி நுழைய முயன்ற பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்கள் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். சபைக் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நுழைவு வாயில் முன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுவை மாநில சட்டசபைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் தவிர மேலும் 3 பேரை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்துக்கொள்ளலாம். இந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மாநில அரசின் சிபாரிசின்பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நியமிப்பது வழக்கம்.
ஆனால் இந்த முறை மாநில அரசின் பரிந்துரை இல்லாமலேயே பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், தனியார் பள்ளி உரிமையாளர் செல்வகணபதி ஆகிய 3 பேரை மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாக நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது.
இதை எதிர்த்து முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் கடந்த 22-ந் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. இதில் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும். அவர்களை ஏற்க மறுத்து சபாநாயகர் வெளியிட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் புதுவை சட்டசபை கூட்டம் நேற்றுகூடியது. நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்தநிலையில் சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவின்பேரில் சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் தனித்தனியாக கடிதம் அனுப்பி இருந்தார். அதில், ஐகோர்ட்டு தீர்ப்பின்போது சபாநாயகரின் கருத்து கேட்கப்படவில்லை. இதுகுறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்க வேண்டி இருப்பதால் ஏற்கனவே நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டசபைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட அதே நிலை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நியமன எம்.எல்.ஏ.க்களின் பிரச்சினையால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட யாருடைய கார்களையும் சட்டசபைக்குள் வர அனுமதிக்கக்கூடாது என்று சபை காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க நேற்று காலை 9 மணி அளவில் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். நுழைவுவாயில் வரை காரில் வந்து அங்கிருந்து அவர்கள் சபைக்கு நடந்தே சென்றனர்.
அதேபோல் நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரும் காலை 9 மணிக்கு 2 கார்களில் சட்டசபை நுழைவுவாயில் அருகே வந்து இறங்கினர். அங்கிருந்து சட்டசபைக்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்து சபை காவலர்கள் தடுத்து நிறுத்தனர். மேலும் நுழைவுவாயில் மெயின் கதவை மூடி பூட்டுபோட்டனர்.
ஆனால் அதையும் மீறி 3 பேரும் சட்டசபை வளாகத்திற்குள் நுழையும் விதமாக கேட்டை தள்ளிக்கொண்டு நின்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் குண்டுகட்டாக தூக்கி நுழைவுவாயில் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். இதனை தொடர்ந்து நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சட்டசபை நுழைவுவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஐகோர்ட்டு தீர்ப்பை ஏற்க கோரி அரசை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டபடி இருந்தனர்.
அப்போது கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களுடன் 3 நியமன எம்.எல்.ஏக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஐகோர்ட்டு உத்தரவு நகல் இருக்கும் போது எங்களை தடுத்து நிறுத்துவது ஏன்? என்று கேட்டு தகராறு செய்தனர்.
உடனே போலீசார் அவர்களிடம், நாங்கள் உங்களை தடுத்து நிறுத்தவில்லை. சட்டசபை வாசலுக்கு வெளியேதான் எங்களுக்கு அதிகாரம். சட்டசபை வளாகத்துக்குள் சபை காவலர்களுக்கு தான் அதிகாரம். எனவே எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்தனர். அதனைதொடர்ந்து நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேரும் ஐகோர்ட்டு உத்தரவு நகலை காட்டி தங்களை உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவை மதிக்காத உங்களது வேலை பறிபோகும் என்று கூறி சபைக் காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து சட்டசபை காவலரின் தலைவரான (மார்ஷல்) ரமேஷ் அங்கு வந்து மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கும்படி சபாநாயகர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார் எனவே உங்களை அனுமதிக்க முடியாது என உறுதியாக தெரிவித்தார்.
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் அதற்கான உத்தரவை தங்களிடம் தருமாறு கேட்டனர். மேலும் நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் நுழைவுவாயில் கதவை தள்ளிக்கொண்டு மீண்டும் சட்டசபைக்குள் நுழைய தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தனர். மேலும் நுழைவாயிலுக்கு வெளியே நின்றபடி நியமன எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டபடி இருந்தனர்.
இதற்கிடையே காலை 9.25 மணியளவில் கவர்னர் கிரண்பெடி சட்டசபைக்கு வந்தார். முக்கிய நுழைவுவாயில் வழியாக அவர் உள்ளே செல்வது வழக்கம். ஆனால் அங்கு நியமன எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தியதால் நேற்று கவர்னர் சபை வளாகத்தில் இருந்து வாகனங்கள் வெளியே செல்லும் வாயில் வழியாக கவர்னரின் கார் உள்ளே சென்றது. இதனை பார்த்ததும் நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த கதவை சபைக்காவலர்கள் அந்த கதவையும் மூடினர். இதனால் ஏமாற்றம் அடைந்த 3 பேரும் மீண்டும் அரசுக்கும், சபாநாயகருக்கும் எதிராக கோஷமிட்டபடியே இருந்தனர்.
இதற்கிடையே சட்டசபைக்கு வந்த கவர்னருக்கு போலீஸ் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று சட்டசபையின் உள்ளே அவரை அழைத்துச் சென்றனர். அதன்பின் சபை நடவடிக்கைகள் தொடங்கின.
இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவை மீறி சபாநாயகர் செயல்படுவதாகவும், அவரை கண்டித்தும் சட்டசபை நுழைவாயில் முன்பு கூட்டத்தொடர் முடியும் வரை போராட்டம் நடத்தப் போவதாக நியமன எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். அதன்படி சட்டசபை வளாகத்தின் எதிரே மரத்தின் அடியில் அமர்ந்து தலையில் முக்காடு போட்டுக்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர். சட்டசபை அலுவல்கள் முடிந்ததும் மதியம் 1 மணியளவில் போராட்டத்தினை அவர்கள் கைவிட்டனர்.
இந்த விவகாரத்தால் சட்டசபை வளாகத்தில் நேற்று பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Related Tags :
Next Story