கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்: த.மா.கா. வலியுறுத்தல்


கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்: த.மா.கா. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 March 2018 10:00 PM GMT (Updated: 26 March 2018 7:54 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

திருப்புவனம்,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருப்புவனம் கிழக்கு வட்டார தலைவர் வக்கீல் ராஜா மற்றும் நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். முதற்கட்டமாக தேர்தலில் போட்டியிட, வாக்களிக்க தகுதியுள்ள உறுப்பினர் விவரங்களை வெளியிட்டும், தேர்தல் வேட்புமனு குறித்த அட்டவணையையும் அந்தந்த சங்க அறிவிப்பு பலகையில் ஒட்டி வருகின்றனர். எனவே நடைபெற உள்ள கூட்டுறவு சங்க தேர்தலை மாவட்டம் முழுவதும் முறைகேடுகள் இன்றி நேர்மையாக நடத்த வேண்டும். அவ்வாறு நடைபெற்றால் ஏழை-எளிய உறுப்பினர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் அவர்கள் ஒன்றிணைந்து தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். எனவே தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர். 

Related Tags :
Next Story