சொடக்கு போடும் நேரத்தில் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாது முதல்-அமைச்சர் பேச்சு
சொடக்கு போடும் நேரத்தில் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பள்ளிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்.பி.பி.காலனியில் ரூ.44.15 கோடியில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா, வெப்படை புதிய போலீஸ் நிலையம் தொடக்கவிழா மற்றும் காவிரி ஆர்.எஸ்.பகுதியில் ரூ.22 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் புதியபாலம் அடிக்கல் நாட்டுவிழா ஆகியவை நேற்று பள்ளிபாளையம் எஸ்.பி.பி.காலனியில் நடந்தது.
இந்த விழாவுக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வரவேற்று பேசினார். தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா , செல்வக்குமார சின்னையன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிதாக கட்டப்பட்டு உள்ள ரெயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்தும், புதிய போலீஸ் நிலையத்தை தொடங்கி வைத்தும், புதியபாலம் அமைக்க அடிக்கல் நாட்டியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது நாமக்கல் மாவட்டம் எப்படி இருந்தது. இந்த ஆட்சி வந்தவுடன் எப்படி மாறி உள்ளது என்பதை மக்கள் தராசு போல் நிறுத்தி பார்க்க வேண்டும். திருச்செங்கோட்டில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் நான்கு வழிச்சாலை கிடைத்த ஒரே மாவட்டம் தமிழகத்திலேயே நாமக்கல் மாவட்டம் தான். திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு வரை 4 வழிச்சாலை அமைக்க இருக்கிறோம். திருச்செங்கோடு, சங்ககிரி, கொங்கணாபுரம், தாரமங்கலம் அங்கிருந்து ஓமலூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் எங்கும் இல்லாத சிறப்பு இந்த நாமக்கல் மாவட்டத்திற்கு கிடைத்து உள்ளது. திருச்செங்கோட்டை மையமாக வைத்து அனைத்து பகுதிகளுக்கும் 4 வழிச்சாலை கிடைத்து உள்ளது. திருச்செங்கோடு புறவழிச்சாலை பணி விரைவில் தொடங்கப்படஉள்ளது.
மேட்டூர் கிழக்குக்கரை, மேற்குகரை கால்வாய் மூலம் நீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கிழக்குகரை கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் கடைகோடியான பள்ளிபாளையம் வரை தங்குதடையின்றி வர கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 15 நாளில் டெண்டர் விடப்பட உள்ளது.
பள்ளிபாளையம், குமாரபாளையம் விசைத்தறி, கைத்தறி நிறைந்த பகுதியாகும். இத்தொழிலுக்கு உயிராக இருப்பது மின்சாரம். விசைத்தறி தொழில் சிறக்க விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என தெரியாது. 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் உறுதியளித்தபடி, 3 ஆண்டுகளில் தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றிய பெருமை ஜெயலலிதாவை சாரும்.
இன்னும் கூடுதலான மின்சாரத்தை உற்பத்தி செய்து, இனி எந்த காலத்திலும் தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தான் உடன்குடி மின்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. புதிய மின் திட்டங்களை உருவாக்குவதன் மூலம், தொழில் வளம் பெருகும், அப்போது மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.
திருச்செங்கோட்டில் இருந்து சேலம் செல்லும் வழியில் அரியானூர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும். இதுபோல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குமாரபாளையம் நகருக்குள் செல்லும் சாலை சந்திப்பிலும் உயர்மட்ட பாலம் கட்டிக்கொடுக்கப்படும். அத்தனூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை, அந்த அனுமதியை பெற்று உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பெற சட்டப்பூர்வமான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. ஈரோட்டில் நடந்த தி.மு.க. மண்டல மாநாட்டில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சொடக்கு போடும் நேரத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியும் என்றார். எப்படியாவது இந்த ஆட்சியை கலைப்பதே அவர்களது எண்ணமாக உள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது இல்லை.
நாங்கள் பதவி ஏற்ற காலத்தில் இருந்து இதையே தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். பட்ஜெட் கூட்டம் முடிந்தவுடன் ஆட்சி கலைக்கப்படும், மானிய கோரிக்கை முடிந்தவுடன் ஆட்சி கலைக்கப்படும், 3 மாதங்களில் கலைக்கப்படும் என்றார். அதையும் தாண்டி மக்கள் ஒத்துழைப்போடு ஓராண்டு இந்த ஆட்சி நிறைவு செய்யப்பட்டு உள்ளது. சொடக்கு போடும் நேரத்தில் எல்லாம் இந்த ஆட்சியை கலைக்க முடியாது.
ஏனென்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இருபெரும் தெய்வ சக்தி படைத்த தலைவர்கள் எங்களுக்கு துணையாக இருக்கின்றனர். அந்த தெய்வ சக்தி எங்களிடம் இருக்கும் வரை, அவர்களின் ஆசி எங்களிடம் இருக்கும் வரை, எத்தனை எதிர்க்கட்சிகள் எதிர்த்தாலும் அதை தவிடு பொடியாக்கிவிடுவோம்.
எதிலும் இந்த அரசு சோடை போகவில்லை, உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உள்ளது. பிற துறைகளிலும் வளர்ச்சிப்பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது. சாதாரண மக்களோடு பழகி இந்த அளவுக்கு உயர்ந்து உள்ளோம். சாதாரண அடித்தட்டில் உள்ள மக்களுக்கு என்ன துன்பம் இருக்கும் என்பதை உணர்ந்து இருக்கிறோம். அதை எப்படி களைவது, நிவர்த்தி செய்வது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் செல்வாக்கு மிகுந்த இடத்தில், இருந்த இடத்தில் இருந்து வெற்றிபெற்று அமைச்சராகவில்லை. கடினமான உழைப்பால், விசுவாசத்தால் இந்த நிலைக்கு உயர்ந்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் திருச்செங்கோட்டில் இருந்து பரமத்திக்கு ரூ.146 கோடியே 39 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட சாலை, ரூ.21 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் திருவண்ணாமலை - தியாகதுருகம் சாலையில் மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டு உள்ள உயர்மட்ட ஆற்றுப்பாலம் மற்றும் ரூ.21 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் பண்ருட்டியில் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம் ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, கே.வி.ராமலிங்கம், தென்னரசு, சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் தலைவர்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ராஜதுரை வேல்பாண்டியன் நன்றி கூறினார்.
இதைத்தொடர்ந்து பள்ளிபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழஙகும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.

Related Tags :
Next Story