காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று திருச்சியில் திருமாவளவன் கூறினார்.
திருச்சி,
கரூரில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமானம் மூலம் நேற்று காலை திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்துவதோடு, அதை தவிர்க்கவும் முயற்சி செய்து வருகிறது. வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை)-க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற நிலையில் கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்கிறது.
பிரதமரை நேரில் சந்தித்து பேச முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் எந்த தகவலும் இல்லை. அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க பிரதமர் ஒப்புதல் அளிக்காவிட்டாலும், தமிழக முதல்-அமைச்சர் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட துறை மந்திரியை சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருவது வெறும் கண் துடைப்பாக உள்ளது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.
வஞ்சித்து வருகிறது
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரும் பிரச்சினையில் தெலுங்கு தேசம், பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றாலும், 2 பேர் மந்திரி பதவியில் இருந்து விலகி இருக்கின்றனர். இதை தமிழக எம்.பி.க்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. டெல்டா மாவட்டங்களை சீரழிக்கும் வகையில் மேலும் 28 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிட்டு உள்ளது. இதை கண்டித்து நாளை (இன்று) தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். இதே போல் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி 31-ந் தேதி வைகோ நடத்தும் நடைபயணத்தில் பங்கேற்போம்.
வழக்கு பாய்ந்திருக்கும்
நியூட்ரினோ தொலை நோக்கு திட்டமாக இருக்கலாம். ஆனால் அதற்கு தகுந்த இடம் தமிழகம் அல்ல. பொது மக்கள் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு இல்லாமல் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த வேண்டும். எனவே தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு ஆராய்ச்சி செய்வதை கைவிட வேண்டும். பெரியார் பற்றி எச்.ராஜா விமர்சித்து பேசியதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன்? எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்த கருத்து ஏற்புடையது அல்ல.
இதுபோன்று நானோ (திருமாவளவன்) அல்லது மற்ற தலைவர்களோ பேசி இருந்தால் வழக்கு பாய்ந்திருக்கும். தமிழகத்தில் மதக்கலவரம், வன்முறைகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் ஆபரேஷன் திராவிடம் என்ற திட்டத்தை அமித்ஷா செயல்படுத்தி திராவிட கட்சிகள் இல்லாத தமிழகத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும் தகவல் வெறும் வதந்தியாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story