பெண் நடத்துனர்களுக்கு 9 மாதம் பேறு கால விடுப்பு


பெண் நடத்துனர்களுக்கு 9 மாதம் பேறு கால விடுப்பு
x
தினத்தந்தி 27 March 2018 6:28 AM IST (Updated: 27 March 2018 6:28 AM IST)
t-max-icont-min-icon

பெண் நடத்துனர்களுக்கு 9 மாதம் பேறு கால விடுப்பு வழங்க மாநில போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 4 ஆயிரத்து 400 பெண் நடத்துனர்களும் அடங்குவர். தற்போது பெண் நடத்துனர்களுக்கு சம்பளத்துடன் 6 மாதம் பேறு கால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதை 9 மாதமாக அதிகரிக்க மாநில போக்குவரத்து கழகம் முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து மாநில போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அதிகாரி அப்ஜித் போஸ்லே கூறியதாவது:-

கர்ப்ப காலத்தில் பணியில் இருந்த 6 பெண் நடத்துனர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்ட சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து பெண் நடத்துனர்களின் பேறு கால விடுப்பை 9 மாதமாக அதிகரிக்க முடிவு செய்து உள்ளோம். மேலும் கர்ப்பிணி நடத்துனர்களுக்கு அலுவலக பணி வழங்கவும் முடிவு செய்து உள்ளோம் என அவர் கூறினார்.

போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவிற்கு பெண் நடத்துனர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.


Next Story