உருகாத ஐஸ்கிரீம் தயாரிப்பில் வாழை
வாழையை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் தண்டில் உள்ள மூலப்பொருட்களைக் கொண்டு உருகாத ஐஸ்கிரீம் தயாரிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.
கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் கனடாவின் கவுல்ப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இதை கண்டுபிடித்துள்ளன.
நாம் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறிந்துவிடுவோம். வியாபாரிகள் வாழை குலைத் தண்டை தூக்கி எறிந்துவிடுவார்கள். பயனற்றதாக கருதப்பட்ட இந்தத் தண்டிலிருந்து, உருகாத ஐஸ்கிரீம் தயாரிக்கும் மூலப்பொருளை பிரித்து எடுத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். வாழைத்தண்டில் சி.என்.எப். எனப்படும் நானோ இழைகள் ஏராளமாக உள்ளன. இதை ஐஸ்கிரீம் தயாரிப்பில் கலந்தால் ஐஸ்கிரீம்கள் உருகுவது தடுக்கப்படுகிறது.
வாழைத் தண்டின் நானோ இழைகள் குறைந்த கொழுப்புச்சத்து கொண்டது, ஐஸ்கிரீம்களுக்கு நல்ல வளவளப்புத் தன்மையைத் தரக்கூடியது. ஐஸ்கிரீமில் காணப்படும் கொழுப்புப் பொருட்களையும் சிறிதளவு உறிஞ்சுவதால், ஐஸ்கிரீம் மூலம் கிடைக்கும் கலோரி ஆற்றல்கள் சற்று குறைகிறது.
ஏற்கனவே டண்டீ பல்கலைக்கழகம் புரதப்பொருட்களைச் சேர்ந்து உருகாத ஐஸ்கிரீம் தயாரிப்பு நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது. தற்போது உருகாத ஐஸ்கிரீமிற்கு கூடுதலாக ஒரு புதுவழி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story