மேம்பாலத்தில் நிறுத்தப்படும் அரசு பஸ்கள்


மேம்பாலத்தில் நிறுத்தப்படும் அரசு பஸ்கள்
x
தினத்தந்தி 28 March 2018 4:15 AM IST (Updated: 28 March 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்து தாம்பரம் மார்க்கத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பும் இந்த பஸ்கள் அடுத்ததாக செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் நிற்கும்.

செங்கல்பட்டு,

இதையடுத்து அந்த பஸ்கள் புலிப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் நிற்கும். அவ்வாறு இயக்கப்படும் பஸ்களில் சில பஸ்கள் பயணிகளிடம் டிக்கெட் வாங்குவதற்காக செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம்- புலிப்பாக்கம் பஸ் நிறுத்தம் இடையே உள்ள மேம்பாலத்தில் நிறுத்தப்படுகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது போன்ற ஆபத்தான செயலில் ஈடுபடும் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story