நாகூரில் சாலை அமைத்து தரக்கோரி 5-வது நாளாக வீடுகளில் கருப்புக்கொடியேற்றி போராட்டம்
நாகூரில் சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் தங்களது வீடுகளில் நேற்று 5-வது நாளாக கருப்புக்கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகூர்,
நாகையை அடுத்த நாகூரில் நாகை நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டில் சியா மரைக்காயர் தெரு உள்ளது. இந்த பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாகத்தான் பள்ளி மாணவ- மாணவிகள் சைக்கிள்களில் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் போது சாலையில் உள்ள பள்ளங்களில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. மேலும், இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாகை நகராட்சி அதிகாரியிடம் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாகை 7-வது வார்டு சியாமரைக்காயர் தெருவில் சாலை அமைக்காததை கண்டித்தும், நகராட்சி அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்தும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 23-ந்தேதி முதல் தங்களது வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 5-வது நாளாக சியாமரைக்காயர் தெரு பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் நாகூர் மக்கள் நலசங்கம் சார்பில், தலைவர் சாஹாமாலிம் தலைமையில் பொதுமக்கள் நாகை நகராட்சி அலுவலகத்தில் நாகூர் சியாமரைக்காயர் தெரு உள்ளிட்ட பகுதியில் சேதமடைந்துள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்கக்கோரி மனு அளித்தனர். அப்போது நகராட்சி உதவி பொறியாளர் வசந்தன் மற்றும் அதிகாரிகள், இன்னும் ஒரு வாரத்தில் சாலை அமைத்து தரப்படும் என்று உறுதியளித்தனர். சாலை அமைத்து தரும்வரை வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி நடத்தப்படும் போராட்டம் தொடரும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story