கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டியில் உள்ள மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு மின்சார வாரியம், கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மணிவேல் தலைமை தாங்கினார். முருகன் முன்னிலை வகித்தார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கருணாநிதி பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். ஒருங்கிணைப்பாளர் திருப்பதி நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு, அடையாள அட்டை வழங்க வேண்டும். அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ. 380 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Related Tags :
Next Story