மாவட்டத்தில் முதல் முறையாக ஜெகதளாவில் குறுதேயிலை தொழிற்சாலை திறப்பு, விவசாயிகள் மகிழ்ச்சி
நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக ஜெகதளாவில் குறுதேயிலை தொழிற்சாலை திறக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் கம்பெனி தேயிலை தொழிற்சாலைகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டாலும் சிறு தேயிலை விவசாயிகளும் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகளுக்கு பச்சை தேயிலை கொள்முதல் விலை தான் வாழ்வாதாரமாக உள்ளது. பச்சை தேயிலைக்கு கொள்முதல் விலையில் ஏற்றம் இறக்கம் இருந்து வருகிறது.
விலை வீழ்ச்சியின் போது சிறு தேயிலை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பச்சை தேயிலைக்கு கூடுதல் விலை கிடைக்க தரமான பச்சை தேயிலை பறிக்க தேயிலை வாரியம் அறிவுரை வழங்கி வருகிறது. தேயிலை வாரியம் சிறு தேயிலை விவசாய சங்கத்தை அமைத்து அவைகளை ஊக்கப்படுத்தி வருகிறது. தரமான பச்சை தேயிலைக்கு கூடுதல் விலை பெற குறு தேயிலை தொழிற்சாலைகளை அமைக்க விவசாய சங்கங்களுக்கு தேயிலை வாரியம் அறிவுரை வழங்கியது.
இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக குன்னூர் அருகேயுள்ள ஜெகதளாவில் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து தேயிலை வாரிய உதவியுடன் குறு தேயிலை தொழிற்சாலையை அமைத்துள்ளன. இந்த புதிய தேயிலை தொழிற்சாலையின் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட தேயிலை வாரிய செயல் இயக் குனர் பால்ராசு குறு தேயிலை தொழிற்சாலையை திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தரமான பச்சை தேயிலைக்கு கூடுதல் விலை கிடைக்க ஜெகதளாவில் உள்ள விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து மாவட்டத்தில் முதல் முறையாக குறு தேயிலை தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆர்தோ டக்ஸ் மற்றும் கிரின் டீ உற்பத்தி செய்யப்படும். தரமான பச்சை தேயிலையை கொண்டு ஆர்தோட க்ஸ் மற்றும் கிரின் டீ தயாரிப்பதால் நல்ல விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த தொழிற்சாலையின் தயாரிப்புக்கு கிடைக்கும் விலையை பார்த்து மற்ற இடங்களிலும் குறு தேயிலை தொழிற்சாலைகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெகதளாவில் புதிதாக குறு தேயிலை தொழிற்சாலை திறக்கப்பட்டு இருப்பதால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இது குறித்து விவசாயி ஒருவர் கூறும் போது, இங்கு குறு தேயிலை தொழிற்சாலை தொடங்கப்பட்டு இருப்பதன் மூலம் இப்பகுதி விவசாயிகளுக்கு இனி பச்சை தேயிலைக்கு நல்ல விலை கிடைக்கும். இது விவசாயிகளை ஊக்கப்படுத்தும் என்றார்.

Related Tags :
Next Story