உழவர்கரை நகராட்சியில் 17 வார்டுகளில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை, அமைச்சர் நமச்சிவாயம் தகவல்


உழவர்கரை நகராட்சியில் 17 வார்டுகளில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை, அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
x
தினத்தந்தி 28 March 2018 4:00 AM IST (Updated: 28 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

உழவர்கரை நகராட்சியில் 17 வார்டுகளில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

அமைச்சர் நமச்சிவாயம் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உழவர்கரை நகராட்சி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்க நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. இந்தியா முழுவதும் திறந்தவெளி கழிப்பிடத்தை முற்றிலும் அகற்றுவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதையொட்டி புதுச்சேரி அரசும், மத்திய அரசும் சேர்ந்து திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக உருவாக்க வீடுகள் தோறும் கழிப்பறை கட்ட தலா ரூ.20 ஆயிரம் மானியமாக அளித்து வருகிறது.

உழவர்கரை நகராட்சி பகுதியில் நடத்திய ஆய்வில் சாமிப்பிள்ளைதோட்டம், ரெயின்போ நகர், வினோபா நகர், முத்திரையர்பாளையம், கோவிந்தன்பேட், தர்மாபுரி, நடேசன் நகர், ஆலங்குப்பம், கணபதிசெட்டிகுளம், பெரிய காலாப்பட்டு (மேற்கு), பெரிய காலாப்பட்டு (கிழக்கு), பிள்ளைச்சாவடி, ராஜாஜி நகர், வீமகவுண்டன்பாளையம், அரும்பார்த்தபுரம், உழவர் கரை, ரெட்டியார்பாளையம் ஆகிய வார்டுகளில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

தூய்மை இந்தியா இயக்கத்தின் வழிமுறைகளின்படி 17 வார்டுகள் அடங்கிய இந்த பகுதி திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத வார்டுகளாக அறிவிக்கப்படுகிறது. இதுகுறித்து இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் அதுதொடர்பான கருத்துகளை உரிய தகவல்களோடு உழவர்கரை நகராட்சி ஆணையருக்கு எழுத்து மூலமாக 3 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்களிடம் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் ஆட்சேபனை அல்லது ஆலோசனை பெறப்படவில்லையெனில் இந்த 17 வார்டுகளும் திறந்தவெளி கழிப்பறை இல்லாத வார்டுகளாக உறுதி செய்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story