மத்திய நிதி ஆணையத்தில் புதுச்சேரியை சேர்க்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
புதுச்சேரி மாநிலத்தை மத்திய நிதி ஆணையத்தில் சேர்க்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டின் 15-வது மத்திய நிதி ஆணையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. மாநிலங்களுக்கு மத்திய வரி வருமானத்தில் இருந்து எவ்வளவு நிதி பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய நிதி ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். நிதி ஆணையத்தின் கீழ் நிதி பகிர்வு செய்யும் மாநிலங்களின் பட்டியலில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் வரவில்லை.
மாநிலங்கள் மற்றும் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசங்கள் மட்டும் தான் நிதி ஆணையத்தின் பட்டியலில் வருகின்றன என்று இருப்பதால் சட்டசபை பெற்றுள்ள நம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இதன் மூலம் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு புதுச்சேரி மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது.
மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் புதுச்சேரி மாநிலத்திற்கு பொருந்தும் வகையில் நிதி ஆணையத்தின் வரம்புக்குள் கொண்டு வர அரசியல் சட்ட திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அரசு முயற்சி எதுவும் எடுக்கவில்லை.
1956-ம் ஆண்டில் ஏற்பட்ட பிரெஞ்சு-இந்திய ஒப்பந்தத்தின் படி புதுச்சேரி மாநில நிர்வாக செலவினை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசு, மத்திய நிதி ஆணையத்தின் கவனத்திற்கு இதை கொண்டு செல்லவில்லை. 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் 2020-25 ஆண்டு காலத்திற்கானது. புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி இனியும் காலம் தாழ்த்தாமல் புதுச்சேரி மாநிலத்தின் எதிர்கால ஆபத்தை தடுக்கும் வகையில் பிரெஞ்சு-இந்திய ஒப்பந்தத்தின் உறுதிமொழிகளை எடுத்துக்கூறி மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு எல்லைக்குள் புதுச்சேரி மாநிலத்தை சேர்க்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story