தொடக்க கூட்டுறவு சங்க தேர்தல்: வேட்புமனுக்கள் தள்ளுபடியானதால் தி.மு.க.வினர் போராட்டம்
தொடக்க கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்புமனுக்கள் தள்ளுபடியானதால் தி.மு.க.வினர் 3 இடங்களில் கூட்டுறவு சங்க அலுவலகங்களை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் தொடக்க கூட்டுறவு சங்க தேர்தலில் நேற்று வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது தி.மு.க.வினரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் ஆத்திரம் அடைந்த அக்கட்சியினர், 3 இடங்களில் கூட்டுறவு சங்க அலுவலகங்களை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு 4 நிலைகளாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் நிலையில் 126 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வேட்புமனுக்கள் அனைத்தும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நேற்று காலை 10 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில் பல கூட்டுறவு சங்கங் களில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சியினரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் குறிஞ்சிப்பாடி நெசவாளர் கூட்டுறவு சங்கம், தீர்த்தனகிரி மற்றும் கட்டியாங்குப்பம் உள்ளிட்ட இடங் களில் கூட்டுறவு சங்க அலுவலகங்களை நேற்று பிற்பகல் 3 மணி அளவில் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் மற்றும் துணைப்பதிவாளரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர் களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் கலெக்டர் தண்டபாணியை செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். அப்போது, அதிகாரிகள் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டு தி.மு.க.வினரின் வேட்புமனுக்களை எந்தகாரணமும் இன்றி நிராகரிப்பதாக புகார் தெரிவித்தார்.
குறிஞ்சிப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் தலா 11 பேர் உள்பட மொத்தம் 31 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் அதிகாரியும், கூட்டுறவு சங்க சார்பதிவாளருமான ராமச்சந்திரன் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு வர வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தி.மு. க.வினர் ஒன்று திரண்டு வங்கியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் களை போலீசார் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து தி.மு.க. வினர், வங்கியின் செயல் அதிகாரி மற்றும் குறிஞ்சிப்பாடி போலீசில் இப்பிரச்சினை தொடர்பாக புகார் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
இதற்கிடையே இன்று(புதன்கிழமை) மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. போட்டி யிருந்தால், அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி ஓட்டுப் பதிவு நடக்கும். மறுநாள் (3-ந்தேதி) காலை 10 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
Related Tags :
Next Story