பஸ் பயணியிடம் பணம் திருடிய 2 பெண்கள் கைது


பஸ் பயணியிடம் பணம் திருடிய 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 28 March 2018 4:00 AM IST (Updated: 28 March 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

பஸ் பயணியிடம் பணம் திருடிய 2 பெண்கள் கைது. பொதுமக்கள் உதவியுடன் அவர்களை பிடித்து விசாரித்த போது, பணத்தை அவர்கள் தான் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகேயுள்ள பேரளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேஸ்வரி (வயது 34). நேற்று இவர், பேரளியில் இருந்து தனியார் பஸ் மூலம் பெரம்பலூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நான்குரோடு பகுதியில் பஸ்சிலிருந்து இறங்கிய முருகேஸ்வரி தனது பர்சினை பார்த்த போது, அதிலிருந்த ரூ.32 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகேஸ்வரி பின்னர் சுதாரித்து கொண்டு உடனடியாக ஷேர் ஆட்டோ பிடித்து அங்கிருந்து பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்துக்கு விரைந்து வந்தார். பின்னர், தான் பயணம் செய்த அந்த தனியார் பஸ்சுக்குள் ஏறிய அவர் தனது பக்கத்தில் அமர்ந்திருந்த 2 பெண்களிடம் பணம் காணாமல் போனது பற்றி விசாரித்தார். இதற்கிடையே அந்த பெண்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர். பொதுமக்கள் உதவியுடன் அவர்களை முருகேஸ்வரி பிடித்து விசாரித்த போது, பணத்தை அவர்கள் தான் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் விசாரணையில் அவர்கள், சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி மலையடிவாரம் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவிகள் அனிதா (24) மற்றும் திவ்யா (23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து அனிதா, திவ்யாவை கைது செய்தார். 

Next Story