நூதன முறையில் தொழில் அதிபரிடம் ரூ.7 லட்சம் கொள்ளையடித்த 2 பேர் பிடிபட்டனர்


நூதன முறையில் தொழில் அதிபரிடம் ரூ.7 லட்சம் கொள்ளையடித்த 2 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 27 March 2018 11:08 PM GMT (Updated: 27 March 2018 11:08 PM GMT)

தொழில் அதிபரிடம் நூதன முறையில் ரூ.7 லட்சம் கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை,

தொழில் அதிபரிடம் நூதன முறையில் ரூ.7 லட்சம் கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.7 லட்சம் கொள்ளை

மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் பாவின்(வயது 40). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி காந்திவிலி கிழக்கு பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்தார். அசோக்நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் தொழில்அதிபரின் கார், ஒரு வாகனத்தில் உரசி விபத்து ஏற்பட்டுவிட்டதாக கூறினர்.

இதையடுத்து தொழில்அதிபர் காரை நிறுத்தி அதில் இருந்து இறங்கி வெளியே வந்து பார்த்தார். அவர் கவனம் சிதறிய நேரம் பார்த்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காரில் இருந்த ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்து க்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

குஜராத்தில் கைது

இதுகுறித்து தொழில் அதிபர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்களின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. விசாரணையில் கொள்ளையர்கள் பெயர் நீலேஷ் (40), கமலேஷ் (32) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

இந்தநிலையில் அவர்கள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பதுங்கி இருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் நூதன கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story