மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ரூ.43¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ரூ.43¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 29 March 2018 4:00 AM IST (Updated: 29 March 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

கந்தசாரப்பட்டியில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ரூ.43¼ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அன்பழகன் வழங்கினார்.

வெள்ளியணை,

கரூர் அருகே மூக்கணாங்குறிச்சி கிராமம் கந்தசாரப்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசுகையில், “தற்போது வறட்சி காலம் தொடக்கத்தில் உள்ளதால் குடிநீரை அனைவரும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது. தங்கள் வீட்டில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சிறு, குறு விவசாயிகள் நுண்ணீர் பாசன முறையை அரசு மானியத்தில் அமைத்து நீர் மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்” என்றார்.

முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்பட மொத்தம் 293 பயனாளிகளுக்கு ரூ.43 லட்சத்து 24 ஆயிரத்து 260 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அன்பழகன் வழங்கினார். முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், தோட்டக்கலைத்துறை உள்பட பல்வேறு துறைகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியில் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் எடுத்துக்கூறினர்.முகாமில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், உதவி கலெக்டர் சரவணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியம் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story