துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் சினிமா பாணியில் ரூ.18 லட்சம் தங்கம் கடத்தல், ராமநாதபுரம் வாலிபர் கைது
மதுரை விமான நிலையத்தில் செருப்பில் மறைத்து வைத்து ரூ.18 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த ராமநாதபுரம் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து அந்த விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க புலனாய்வுத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த சுல்தான் ரிஷ்வான் சைமான் (வயது 35) என்பவர் அங்கு வந்தார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் அவர் கொண்டு வந்த உடமைகளை தனித்தனியாக சோதனை செய்தனர். ஆனால் அதில் தங்கம் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் மீது சந்தேகம் இருந்ததால், அவரை தனி அறையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நீண்டநேர விசாரணைக்கு பின்னர் அவர் அணிந்திருந்த செருப்பில் மறைத்து தங்கம் கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார். அவர் அணிந்திருந்த செருப்பை சோதனை செய்தபோது அதில் களிமண் போன்று இருந்தது. அதனை தீயில் வைத்து எரித்தபோது அதில் இருந்து தங்கத்துகள்கள் வெளியே வரத் தொடங்கின.
இதனைதொடர்ந்து அதிகாரிகள், அதில் இருந்த ரூ.18 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் சுல்தான் ரிஷ்வான் சைமானையும் கைது செய்தனர்.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சுல்தான் ரிஷ்வான் சைமானின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்தது. அதனால் தான் அவரை சோதனை செய்தோம். ஆனால் முதலில், அவரிடம் இருந்து தங்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. முழு உடலையும் ஸ்கேன் மூலம் சோதனை செய்தோம். அப்போதும் தங்கம் எதுவும் கடத்தி வந்ததாக தெரியவில்லை. இருப்பினும் அவர் மீது நம்பிக்கை ஏற்படாததை தொடர்ந்து, தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினோம்.
அப்போது அவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘அயன்‘ படத்தில் ‘ஷூ‘வில் மறைத்து வைரத்தை கடத்தியதுபோல், அவர் அணிந்திருந்த செருப்பில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அதன்பின்னர் அவர் அணிந்திருந்த செருப்பை வெட்டி பார்த்தபோது, அதில் சுமார் 1236 கிராம் எடை கொண்ட களிமண் போன்ற பொருள் இருந்தது. அதனை தீயில் எரித்து அதில் இருந்த 592 கிராம் எடைகொண்ட தங்கத்தை கைப்பற்றி இருக்கிறோம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மருத்துவ பெல்ட்டில் இதுபோல் தங்கத்துகள்களை கடத்தி வந்ததை கண்டறிந்து கைப்பற்றினோம் என்றனர்.

Related Tags :
Next Story