இறுதியாண்டு தேர்வு முடிந்த பிறகு வகுப்புகள் கிடையாது பள்ளி மாணவர்களுக்கு வழக்கமான கோடை விடுமுறை
இறுதியாண்டு தேர்வு முடிந்த பிறகு ஏப்ரல் 30-ந் தேதி வரை பள்ளிகள் திறந்து இருக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை திரும்ப பெறுவதாகவும், வழக்கமான கோடை விடுமுறை விடப்படும் என்றும் மந்திரி வினோத் தாவ்டே தெரிவித்தார்.
மும்பை,

சுற்றறிக்கை
மராட்டிய மேல்-சபையில் நேற்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த உறுப்பினர் கபில் பாட்டீல் பிரச்சினை ஒன்றை கிளப்பி பேசுகையில், 1 முதல் 9-வது வகுப்பு வரையிலான பள்ளிகள் ஏப்ரல் 30-ந் தேதி வரை திறந்து இருக்க வேண்டும் என்று மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஆண்டு தேர்வு முடிந்த பிறகு பள்ளிக்கூடத்தை திறந்து வைப்பது நியாயமானது அல்ல என்று தெரிவித்தார்.
இதற்கு கல்வி மந்திரி வினோத் தாவ்டே பதிலளித்து கூறியதாவது:-
கோடை விடுமுறை
பள்ளி நாட்கள் தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தற்போது திரும்ப பெறப்படும். எனவே இறுதியாண்டு தேர்வு முடிந்த பிறகு வகுப்புகள் திறந்து இருக்காது. மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணை படி விடப்படும்.
மேற்கண்ட சுற்றறிக்கையை அமல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அது குறித்து அடுத்த கல்வி ஆண்டு முதல் பரிசீலிக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கூறிய மந்திரி வினோத் தாவ்டே, அரசு பள்ளிகள் மூடப்பட்டு வரு வதாக வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங் களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. 10 மாணவர்களுக்கும் குறை வாக உள்ள பள்ளி ஆசிரியர் கள் மட்டும் அருகே உள்ள பள்ளிகளுக்கு மாற்றப்படுவதாக தெரிவித்தார்.

Related Tags :
Next Story