கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதியார் கிராம வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுவை முத்தியால்பேட்டையில் உள்ள பாரதியார் கிராம வங்கி தலைமை அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி,
இந்தியா முழுவதும் உள்ள கிராம வங்கிகளை தனியார் மயமாக்குதலை கண்டித்தும், வணிக வங்கிகளுக்கு இணையாக பென்ஷன், பிற வங்கிகளில் கடைப்பிடிக்கும் பதவி உயர்வு முறையை அமல்படுத்துதல், கருணை அடிப்படையில் வேலை, தற்காலிக ஊழியர்கள் நிரந்தரமாக்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கிராம வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் கடந்த 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதில் புதுவை பாரதியார் கிராம வங்கி ஊழியர்களும் பங்கேற்றனர்.
இந்த நிலையில் புதுவை முத்தியால்பேட்டையில் உள்ள பாரதியார் கிராம வங்கி தலைமை அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பாரதியார் கிராம வங்கி சங்கத்தின் கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். இதில் இணை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமரன், நிர்வாகி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

Related Tags :
Next Story