கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவது வீண் வேலை தொல்.திருமாவளவன் பேட்டி


கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவது வீண் வேலை தொல்.திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 30 March 2018 4:15 AM IST (Updated: 30 March 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவது வீண் வேலை என்று தொல்.திருமாவளவன் கூறினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்றுடன் (நேற்று) கெடு முடிவடைகிறது. மத்திய அரசின் நடவடிக்கையை பார்த்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது என தான் தோன்றுகிறது. இதனை கர்நாடக சட்டபேரவை தேர்தலில் முன்னிலைப்படுத்தி பாரதீய ஜனதாவை வெற்றி பெற வைக்க முயற்சிக்கின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தற்கொலை செய்து கொள்வோம் என நவநீதகிருஷ்ணன் எம்.பி. நாடாளுமன்றத்தில் பேசி யிருக்கிறார். தற்கொலைக்கு மாற்றாக தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற எம்.பி.க்கள் ராஜினாமா செய்தாலே மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இதன் மூலம் சர்வதேச அளவில் இந்திய அரசினை உற்று நோக்க வைக்கலாம்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவது என்பது வீண் வேலை. இதில் ஆதிதிராவிடர் களுக்கோ, பெண்களுக்கோ இடஒதுக்கீடு இல்லை. அப்படி பார்க்கயில் ஆளும் கட்சியினரே இந்த தேர்தலில் தலைவர்களை நியமித்து விடலாமே என எண்ணும் சூழல் தான் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் தான் சென்னையிலுள்ள ரவுடிகளை கூண்டோடு பிடித்து விட்டதாக தகவல் வந்தது. இந்நிலையில் ரவுடிகளால் போலீஸ்காரர் சென்னையில் வெட்டப்பட்ட சம்பவம் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையையே குறிக்கிறது. எனவே கூலிப்படையினர், ரவுடிகளை ஒடுக்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மண்டல செயலாளர்கள் திருமாறன், கிட்டு, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story