கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்


கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
x
தினத்தந்தி 30 March 2018 4:00 AM IST (Updated: 30 March 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நாகேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் சாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. கடந்த 27-ந்தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக நாகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதேபோல் கும்பகோணம் ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஆனந்தவள்ளி அம்மனுடன் ஆதிகம்பட்ட விஸ்வநாதர் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

கொட்டையூர் கோடீஸ் வரர் கோவில் தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் கோடீஸ்வரர், அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) நாகேஸ் வரர் கோவில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவில்களில் சாமி புறப்பாடு நடைபெற்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதேபோல் கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலில் சாமி புறப்பாடு நடைபெற்று காவிரி ஆற்றங் கரையில் தீர்த்தவாரி நடை பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

Next Story