ரெயில் நிலையத்தில் திடீரென மூடப்பட்ட டிக்கெட் விற்பனை மையம் பயணிகள் அவதி
பூதலூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் விற்பனை மையம் திடீரென மூடப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சை-திருச்சி இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து நேற்றுமுன்தினம் முதல் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் உள்ள பூதலூர் ரெயில் நிலையத்தில் பழைய கட்டிடத்தில் டிக்கெட் விற்பனை மையம் இயங்கி வந்தது. இது நேற்றுமுன்தினம் திடீரென மூடப்பட்டது. இதை அறியாத பயணிகள் வழக்கம்போல் டிக்கெட் வாங்குவதற்காக அங்கு சென்று ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் டிக்கெட் விற்பனை மையம் ரெயில் நிலையத்தில் உள்ள புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டிருப்பதை அறிந்த பயணிகள் அங்கு சென்று டிக்கெட் வாங்கினர். இரட்டை பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் பூதலூர் ரெயில் நிலையத்தில் இயங்கி வந்த டிக்கெட் விற்பனை மையம் திடீரென மூடப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-
டிக்கெட் விற்பனை மையத்தை மூடுவது குறித்து எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. புதிய கட்டிடத்தில் உள்ள டிக்கெட் விற்பனை மையம் பயணிகளுக்கு வசதியாக இல்லை. இந்த டிக்கெட் விற்பனை மையத்தால் திருக்காட்டுப்பள்ளி, சித்திரகுடி, வடக்கு பூதலூர், விண்ணமங்கலம், ஒரத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பயணிகள் பூதலூர் கீழ்ப்பாலத்தின் வழியாக ரெயில் நிலையத்துக்கு வரவேண்டி உள்ளது. பயணிகளின் சிரமத்தை உணர்ந்து பூதலூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் விற்பனை மையத்தை பழையபடி செயல்பட வைக்க வேண்டும்.
இவ்வாறு பயணிகள் கூறினர்.

Related Tags :
Next Story