நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
அரசு போக்குவரத்துக்கழக உணவகங்களில் தரமான, சுகாதாரமான உணவு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
பொதுத்துறையான போக்குவரத்து துறையை சீரழிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், மினி பஸ்களை அனுமதி பெற்ற தடங்களில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தாக்குதலுக்கு ஆளாகும் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், அரசு போக்குவரத்துக்கழக உணவகங்களில் தரமான, சுகாதாரமான உணவு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நேற்று காலை முதல் மாலை வரை தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க பொதுச்செயலாளர் சங்கர நாராயணபிள்ளை தலைமை தாங்கினார்.
சங்க தலைவர் லெட்சுமணன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, சங்க துணைத்தலைவர் லியோ, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகனன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் சுந்தரராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

Related Tags :
Next Story