நிலத்துக்கு அடியில் ரூ.43 கோடியில் மின்சார கேபிள் அமைக்கும் பணி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
புதிதாக அமைக்கப்பட்டு வரும் மார்த்தாண்டம் மேம்பாலத்தின் நிலத்துக்கு அடியில் ரூ.43 கோடியில் மின்சார கேபிள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
குழித்துறை,
மார்த்தாண்டம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் வெட்டுமணியில் இருந்து பம்மம் வரையில் தேசிய நெடுஞ்சாலையில் 2கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உயர்ரக இரும்பினால் அமைக்கப்படும் இந்த மேம்பால பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே மேம்பாலம் அமைக்கப்படும் வெட்டுமணி முதல் பம்மம் வரை 2கி.மீ. தூரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.43 கோடியில் நிலத்துக்கு அடியில் மின்சார கேபிள் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூமி பூஜையை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பார்வதிபுரம் மேம்பால பணிகளும் ஜூன் மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கோட்டார், செட்டிகுளம் மேம்பால அடிக்கல் நாட்டு விழா பார்வதிபுரம் மேம்பால பணிகள் முடியும் அதே நாளில் நடைபெறும். அது சுமார் 3 கி.மீ. நீளத்தில் அமையும். ஒழுகினசேரி வடசேரி மேம்பால அடிக்கல் நாட்டு விழாவும் ஜூன் மாதத்தில் நடைபெறும். மார்த்தாண்டம் மேம்பால பணிகள் முடிவடைந்ததும் களியக்காவிளை மேம்பால அடிக்கல் நாட்டு விழா நடைபெறும். பார்வதிபுரம் மேம்பால பணிகள் முடிவடைந்ததும் தக்கலை மேம்பால பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்.
மேலும் சுங்கான் கடையில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் உள்ளது. 4 வழிச்சாலை அமைப்பதில் பல பிரச்சினைகள் உள்ளன. அந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வருகிறது. 4 வழிச்சாலையின் ஒரு பகுதியாக காவல் கிணறு முதல் நாகர்கோவில் வரை ஜூன் மாதம் முடிக்க திட்டமிட்டு பணிகள் நடக்கி றது. இந்த ஆண்டு இறுதிக்குள் கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை 4 வழிச்சாலை பணி முடிக்கப்படும்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே 3 இடங்களில் பஸ்போட் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி 4-வதாக நாகர்கோவிலிலும் பஸ்போட் அமைக்கப்படும். அதற்கு 20 ஏக்கர் நிலம் தேவை. அந்த இடமும் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு 103 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆசாரிபள்ளம் மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. இப்போது புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும். குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க இடம் பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குமரி மாவட்டத்தில் எந்த திட்டங்கள் கொண்டு வந்தாலும் சிலர் எதிர்க்க தொடங்கி உள்ளனர். சேலத்தில் 1993-ல் 128 ஏக்கரில் கட்டிய விமான நிலையத்தில் பிரதமர் மோடியின் முயற்சியால் தற்போது விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைக்க அனைவரின் ஒத்துழைப்பு தேவை. இந்த துறைமுகம் அமைக்கப்படாமல் போனால் குமரி மாவட்டம் இப்போதுள்ள நிலைக்கு கீழே செல்லும்.
தமிழ்நாட்டில் ஒரு வருடத்தில் ரூ.2லட்சம் கோடி மத்திய அரசு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் ரூ.40 ஆயிரம் கோடி திட்டங்கள் மோடி அரசால் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது. எனவே துறைமுகம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story