மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
x
தினத்தந்தி 30 March 2018 3:30 AM IST (Updated: 30 March 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

மாணவியிடம் தவறாக நடக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒரு மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கும் பெங்களூருவை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த வாலிபருக்கு நண்பரான 21 வயது நபர் தர்மபுரி என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். பெங்களூரு வாலிபர் மூலமாக மாணவிக்கு அறிமுகமான அந்த 4-ம் ஆண்டு படிக்கும் மாணவர் அந்த மாணவியை தர்மபுரியில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்து தவறாக நடக்க முயன்றதாகவும், செல்போனில் இருந்த மாணவியின் படங்களை மீண்டும் மாணவியிடம் வழங்க ரூ.15 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் 4-ம் ஆண்டு படிக்கும் அந்த மாணவர் உள்பட 4 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து மாணவியிடம் தவறாக நடக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்த மாணவரை போலீசார் கைது செய்தனர். மற்ற மாணவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. 

Next Story