சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
சிங்காரப்பேட்டை அருகே சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்கள்.
ஊத்தங்கரை,
ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ளது புளியானூர் கிராமம். இந்த கிராமத்தில் 700-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மாணவ, மாணவிகள் அருகாமையில் உள்ள சிங்காரபேட்டையிலுள்ள அரசு பள்ளிகளில் சேர்த்து படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிளஸ்-2 முடித்து உயர் கல்வி படிக்க கல்லூரியில் சேர சாதி சான்றிதழ் கேட்பதால் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகம் ஆகிய இடங்களில் சாதி சான்றிதழ் கேட்டு பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்காததை கண்டித்தும், சாதி சான்றிதழ் வழங்க கோரியும் கிராமமக்கள் நேற்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்கள்.இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:-
பிள்ளைகளை அனுப்ப மாட்டோம்
பள்ளியில் படிக்கும் எங்கள் பிள்ளைகளை சாதி சான்றிதழ் கேட்டு வகுப்பை விட்டு வெளியேற்றுவதால் பல மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில்லை. எங்கள் கிராமத்தை சேர்ந்த பேபி என்ற மாணவி அரசு பள்ளியில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று அரசு கல்லூரியில் படிக்க விண்ணப்பித்து மதிப்பெண் தகுதி அடிப்படையில் சீட்டு கிடைத்த போதிலும் சாதி சான்றிதழ் கேட்டதால் மாணவிக்கு படிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தற்போது மாணவி வீட்டிலேயே உள்ளார். இது போல பலபேரின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது. இதேபோல் பல பெண்கள் படிப்பை தொடர முடியாமல் பாதியிலே முடித்து சிறு வயதிலே திருமணம் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகத்தால் பழங்குடி மக்களுக்கு வழங்கப்படும் இலவச வீடு எங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் ஏன் சாதி சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர். பள்ளியில் படிக்கும் எங்கள் பிள்ளைகளிடம் சாதி சான்றிதழ் கேட்டு பள்ளியை விட்டு வெளியேற்றுவதால் இனி எங்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்கும் வரை எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story