விஷவாயு தாக்கி 3 பேர் பலி: தனியார் தோல் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைப்பு
ஆம்பூர் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் இறந்ததையடுத்து தனியார் தோல் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் ஊராட்சி பகுதியில் குடியாத்தம் - வாணியம்பாடி சாலையில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் ஆம்பூரை சேர்ந்த ரங்கநாதன் (வயது 46), பந்தேரபள்ளியை சேர்ந்த கோதண்டன் (31), கீழ்மிட்டாளத்தை சேர்ந்த செல்வம் (25) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகம் சார்பில், ஈமகாரியங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், இழப்பீடாக தலா ரூ.7½ லட்சமும் வழங்குவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
தொழிற்சாலைக்கு ‘சீல்’
இந்த நிலையில் 3 பேர் விஷவாயு தாக்கி இறந்த சம்பவத்துக்கு காரணமான அந்த தொழிற்சாலைக்கு நேற்று மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மண்டல துணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜகோபால் தலைமையில், உதவி பொறியாளர் பாரதிராஜா, ஆம்பூர் தாசில்தார் சாமுண்டீஸ்வரி மற்றும் வருவாய்த்துறையினர் அந்த தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைத்தனர்.

Related Tags :
Next Story