தமிழக வாழ்வுரிமை கட்சியினர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம்


தமிழக வாழ்வுரிமை கட்சியினர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம்
x
தினத்தந்தி 31 March 2018 4:00 AM IST (Updated: 31 March 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தொட்டியத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொட்டியம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அதன் மேற்கு மாவட்ட அமைப்பாளர் பாபு தலைமையில் நேற்று திருச்சி-சேலம் சாலையில் உள்ள தனியார் வங்கி எதிரே உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், தொட்டியம் மேற்கு ஒன்றிய தலைவர் கருணாகரன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் முருகேசன், கரூர் மாவட்ட நிர்வாகி குழந்தைவேல், நாமக்கல் மாவட்ட நிர்வாகி இளங்கோவன் ஆகியோர் செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதுபற்றிய தகவலறிந்த தொட்டியம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடைந்த போராட்டக்காரர்கள் கீழே இறங்கி வந்தவர். அவர்கள் 6 பேரையும் தொட்டியம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story