கடத்தல், மோசடியை தடுக்க கோவில் சிலைகள் பாதுகாப்பு பணியை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் - எச்.ராஜா வலியுறுத்தல்
கடத்தல், மோசடியை தவிர்க்கும் வகையில் கோவில் சிலைகள் பாதுகாப்பு பணியை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
பழனி,
இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில், கடந்த 24-ந்தேதி வேல் சங்கம ரத யாத்திரை பழனியில் தொடங்கியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு ரதயாத்திரையை தொடங்கி வைத்தார். மொத்தம் 6 ரதங்களில் 6 வேல்களுடன் யாத்திரை சென்றது.
திருத்தணி, சுவாமிமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற இந்த ரதங்கள் நேற்று மதுரைக்கு வந்தன. அதன்பின்னர் திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை ஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு மாலை 6 மணிக்கு மேல் பழனியை ரதயாத்திரை வந்தடைந்தது. பழனி பஸ் நிலையம் அருகே ரதங்கள் வந்ததும், அதில் நின்றபடியே பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பழனி முருகன் கோவில் மூலவர் சிலை செய்ததில் மோசடி நடந்துள்ளதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் வெளி உலகுக்கு காட்டியுள்ளார். இதேபோல் காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலையில் 44 கிலோ தங்கம் மாயமாகி உள்ளது.
தஞ்சை பெரிய கோவிலில் வைக்கப்பட்டிருந்த மன்னர் ராஜராஜன் சிலையும், தஞ்சையை அடுத்த பந்தநல்லூரில் பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சிலைகள் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.300 கோடி மதிப்புள்ள சிலைகளும் மாயமாகி உள்ளன. இது, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக சீர்கேட்டையே காட்டுகிறது. சிலை பாதுகாப்பு பணியை தனியாரிடம் அறநிலையத்துறை ஏன் கொடுக்க கூடாது?.
ஆந்திர மாநிலம் திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் தொலைக்காட்சி நடத்தப்பட்டு மக்களிடையே ஆன்மிகம் பரப்பப்பட்டு வருகிறது. இதேபோல் ஆண்டுக்கு ரூ.200 கோடி வருமானம் உள்ள பழனி மலைக்கோவில் நிர்வாகம் ஏன் தொலைக்காட்சி தொடங்கி திருவாசகம், ராமாயண கதைகளை ஒளிபரப்பி மக்களிடம் ஆன்மிகத்தை பரப்பக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து எச்.ராஜா நிருபர்களிடம் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. இது தொடர்பாக 4 மாநில செயலர்களை அழைத்து மத்திய நீர்வளத்துறை செயலர் பேசி வருகிறார். இந்த 4 மாநிலங்களும் காவிரிக்கு தொடர்புடைய அனைத்து அணைகளையும் காவிரி மேலாண்மை வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். இந்த பணியை தமிழக அரசு செய்து விட்டதா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.
முன்னதாக ஒட்டன்சத்திரத்துக்கு ரதயாத்திரை வந்தது. அப்போது, செக்போஸ்ட் அருகே தாரை தப்பட்டை முழங்க ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பா.ஜனதா மாவட்ட தலைவர் எஸ்.கே.பழனிசாமி, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ரகுபதி, விஷ்வஇந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர்கள் மாரிமுத்து, வெங்கடாசலம் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story