தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை - எடப்பாடி பழனிசாமி பேச்சு
தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை என்று, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மதுரை,
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, ஜெயலலிதா பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் 120 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி, மதுரை பாண்டிகோவிலை அடுத்த அம்மா திடலில் நேற்று நடந்தது.
விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு, திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் மணமக்களுக்கு தங்க மோதிரம், தங்கக் காசு மற்றும் 70 வகை சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, மணமக்களுடன் சேர்ந்து முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் மதிய விருந்து சாப்பிட்டனர்.முன்னதாக, விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசிய தாவது:-
“ஜெயலலிதா தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை எந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்காமல், பங்கம் ஏற்படாமல் பாதுகாத்தவர். இன்றைக்கும் நம் முன்னே இருப்பது காவிரி பிரச்சினை. காவிரி நடுவர் நீதிமன்றம் நிறுவப்பட்டு, 17 ஆண்டுகள் அந்த பிரச்சினையை தீவிரமாக ஆலோசித்து 2007-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பை வழங் கியது.
அந்த தீர்ப்பு வந்ததும் ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டார். அப்போது மத்தியில் காங்கிரஸ், தி.மு.க.கூட்டணி அரசும், மாநிலத்தில் தி.மு.க. அரசும் இருந்தன. காவிரி நடுவர்நீதிமன்ற தீர்ப்புக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும் என்றால் அதனை மத்திய அரசிதழில் அரசாணையாக வெளியிட வேண்டும் என்று கூறினார். அதனை 24 மணி நேரத்தில் செய்யலாம் என்று மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்தினார். ஆனால் மத்திய, மாநில அரசுகள் அவரது பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை. அப்போது தான் 2011 தேர்தலில் நான் வெற்றி பெற்று காவிரி பிரச்சினைக்கு முடிவு கட்டுவேன் என்று கூறினார்.
2011-ம் ஆண்டு அம்மா ஆட்சி பொறுப்பேற்றவுடன் சட்டப் போராட்டம் நடத்தி 2013-ம் ஆண்டு சிறப்பு மிக்க தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தார்.
தற்போது உச்சநீதிமன்றம் காவிரி நடுவர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டு குழு ஆகியவற்றை 6 வார காலத்திற்குள் மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தது. அந்த காலக் கெடு முடிந்து விட்டது.
தமிழக மக்கள், விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? மாநிலத்தில் ஆளும் நாமும் என்ன செய்யப் போகிறோம் என்று மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஆகவே தமிழகத்தின் ஜீவாதார உரிமை எந்தநேரத்திலும் பறிபோகாமல் இருக்க எங்கள் குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதற்கு அடையாளமாக அ.தி.மு.க. சார்பில் வருகிற 3-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தலைநகரங்களிலும் உண்ணாவிரத அறப்போர் நடைபெறும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உண்ணாவிரத போராட்டம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும். காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீரை முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க இந்த போராட்டத்தில் வலியுறுத்தி பேசப்படும். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி உண்ணாவிரத போராட்டம் எவ்வித சிறு பங்கமும் ஏற்படாமல், சட்டம்-ஒழுங்கு காக்கப்பட்டு அமைதியாக நடைபெறும்.“
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறிய தாவது:-
இன்று மணவிழா கண்ட மணமக்கள் வாழ்வில் வெற்றி பெற நற்சிந்தனையோடு இருவரும் உழைக்க வேண்டும். அப்போது தான் முன்னேற்றம் தேடி வரும். இதை சொல்லும் போது ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. அதற்காக சுண்டெலி கதை ஒன்று கூறுகிறேன். ஒரு ஞானியை சந்தித்து ஒரு சுண்டெலி எனக்கு பூனையை கண்டால் பயமாக இருக்கிறது. எனவே என்னை பூனையாக மாற்றுங்கள் என்றது. ஞானியும் அதனை பூனையாக மாற்றினார். அந்த பூனையை நாய் துரத்தியது. உடனே அந்த பூனை ஞானியை சந்தித்து எனக்கு நாயை கண்டால் பயமாக இருக்கிறது என்று ஒவ்வொன்றாக மாற்றும் படி கூறியது. இறுதியில் மனிதராக மாற்றுங்கள் என்று சுண்டெலி கேட்டது. இதை கேட்ட ஞானி சுண்டெலியே, உனது உருவத்தை பலமுறை மாற்றினாலும் உன்னிடம் உள்ள பயம் உன்னை விட்டுப் போகவில்லை. உருவம் மாறினலும் எப்போது நீ உள்ளத்தால் சுண்டெலியாக தான் இருக்கிறாய் என்று கூறி விட்டு மீண்டும் சுண்டெலியாக ஞானி மாற்றினார்.
எனவே ஒவ்வொருவரும் உள்ளத்திலும் தன்னம்பிக்கையும், உயர்ந்த எண்ணமும் வேண்டும். எனவே தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்.
மதுரை ராசியான மண், இங்கு தான் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முதலில் தொடங்கப்பட்டது. இந்த மண்ணில் எதை தொடங்கினாலும் வெற்றி தான். அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை மதுரை. கடந்த தேர்தலில் 10 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. மதுரையில் தொடங்கப்பட்ட எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா 30 மாவட்டங்களில் நடத்தி அதன்மூலம் 30 லட்சம் பேரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பொதுமக்களுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைத்தன.
தமிழகத்தில் சிலர் புதிதாக புறப்பட்டுள்ளனர். அவர்கள் இங்கே காலி இடத்தை நிரப்பப்போகிறோம் என்கிறார்கள். எங்கு காலி இடம் இருக்கிறது. இங்கு காலியிடம் எதுவும் இல்லை. எல்லாமும் நிரப்பப்பட்டு விட்டது, வேறு மாநிலத்திற்கு சென்று பார்க்கலாம். தமிழ்நாட்டில் இடம் இல்லை.
நான் 1974-ம் ஆண்டில் கிளைக்கழக செயலாளராகி, படிப்படியாக முன்னேறி அம்மாவின் ஆசியை பெற்று இன்று இந்த பதவிக்கு வந்துள்ளேன். துணை முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் படிப்படியாக முன்னேறி பல ஆண்டுகளாக உழைத்து மக்களுக்கு பணியாற்றி வந்துள்ளனர். எனவே இங்கு காலியிடம் என்பதற்கு இடமே கிடையாது. அ.தி.மு.க. 1½ கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம். இவ்வளவு பேர் கொண்ட இயக்கம் அ.தி.மு.க. தான். அதே போன்று இளைஞர்கள் அதிகம் கொண்ட இயக்கம் அ.தி.மு.க.தான்.
இந்த இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். தி.மு.க. கூட சமீபத்தில் ஒரு மாநாடு நடத்தியது. அங்கே இங்கு வந்தது போன்று கூட்டம் இல்லை. ஆனால் இங்குள்ள கூட்டம் மாநாட்டை போல திரண்டு எழுச்சியாக உள்ளது.
காவிரி பிரச்சினையில் மத்திய அரசுக்கு அ.தி.மு.க. அழுத்தம் கொடுக்கவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 17 நாட்கள் தொடர்ந்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கி ஒன்றாக சேர்ந்து குரல் கொடுத்தனர். இன்றைக்கு 17 நாட்கள் நாடாளுமன்றம் முடங்கிய வரலாற்றை நாம் படைத்துள்ளோம்.
இவ்வாறு எந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளோம் என்பதை பார்த்தீர்கள். எந்த மாநில எம்.பி.க்களும் இத்தனை நாட்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தவில்லை. அந்த அளவிற்கு அ.தி.மு.க. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே அதற்கான சட்டப் பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டிய கடமை நமக்கு உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரி அ.தி.மு.க. சார்பில் அறவழியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இங்கு அறிவித்தார். அதன்படி வருகிற 3-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் இந்த அறவழி உண்ணாவிரத போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கும்.
இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வை வெளிப்படுத்துவோம். ஒட்டுமொத்த விவசாயிகளின் உணர்வை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Related Tags :
Next Story