முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தீப்பந்தம் ஏந்தி பக்தர்கள் வழிபாடு
பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்தது. இதில் தீப்பந்தம் ஏந்தி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கொன்னையூரில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் பங்குனி திருவிழா கடந்த மாதம் 18-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 25-ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு மண்டகபடி நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் பக்தர்கள் பால்குடம் சுமந்தும், காவடி எடுத்தும் மற்றும் அக்னி குண்டத்தில் இறங்கியும், நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தீப்பந்தம் ஏந்தி வழிபாடு
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை அம்மன் ரதத்தில் வீதி உலா வந்தார். அப்போது திரளான பக்தர்கள் ரதத்தின் இருபுறமும் தங்களது கையில் தீப்பந்தம் ஏந்தியவாறு அம்மனை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த னர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீசார் செய்திருந்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. வருகிற 9-ந்தேதி நாடு செலுத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story