மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல், 308 பேர் கைது
சென்னையில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தேனி மாவட்டத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மொத்தம் 12 இடங்களில் சாலை மறியல் நடந்தது. இதில் 308 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கோம்பை, வீரபாண்டி, சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம் உள்பட 12 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் கம்பத்தில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். போடியில் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் தலைமையில் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தேனி, கோம்பை, சின்னமனூர் ஆகிய 3 இடங்களிலும் நடந்த மறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். தேனியில் நேரு சிலை சிக்னல் பகுதியில் சாலை மறியல் நடந்தது. நகர பொறுப்பாளர் முருகேசன், இளைஞரணி மாவட்ட முன்னாள் துணை அமைப்பாளர் நாராயணபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் இந்த மறியலில் பங்கேற்றனர்.
மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் மறியல் செய்த மொத்தம் 308 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.
மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story