மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருவாரூரில் சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட கழக தலைவர் வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருவாருர் பஸ் நிலையம் அருகே தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசையும், காவிரி நீர் பிரச்சினைக்காக போராடிய மு.க.ஸ்டாலினை கைது செய்த தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திருவாருர் டவுன் போலீசார் கைது செய்தனர். இந்த சாலைமறியல் போராட்டத்தினால் அந்தபகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடவாசல்
இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தி.மு.க. சார்பில் குடவாசல் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தெற்கு பகுதி ஒன்றிய செயலாளர் லெட்சுமி, குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story