போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலைமறியல்
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகையில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதைதொடர்ந்து ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று நாகை புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட நீதிமன்றம் முன்பு நாகை மாவட்ட தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
50 பேர் கைது
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் நாகை - நாகூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story