சன்னாவூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு; காளைகள் முட்டியதில் 12 பேர் காயம்
சன்னாவூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர்.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள சன்னாவூர் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி சன்னாவூர் கிராமம் அருகே உள்ள வயல் வெளியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் காளைகளை அவிழ்த்து விடப்பட்டன. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
12 பேர் காயம்
காளைகள் முட்டியதில் விளாகத்தை சேர்ந்த மரியதாஸ் (வயது 26), லால்குடியை சேர்ந்த நந்தகுமார் (22), பிள்ளையார்பட்டியை சேர்ந்த பாலாஜி (30), ஏலாக்குறிச்சியை சேர்ந்த அருள்குமார் (32), கல்லகத்தை சேர்ந்த சுபாஷ் (23), மலத்தாங்குளத்தை சேர்ந்த ஜெனித் (23) உள்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், படுகாயமடைந்த சுபாஷ் புள்ளம்பாடி அரசு மருத்துவமனைக்கும், ஜெனித் அரியலூர் அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பரிசு பொருட்கள்
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழுவினரால் தங்க நாணயங்கள், சைக்கிள், கட்டில், நாற்காலிகள், சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை காண தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், சேலம், ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் சன்னாவூர் பொதுமக்கள் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Tags :
Next Story