ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் உள்ள புனித பனிமயமாதா ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை நடைபெற்றது. இதனை முன்னிட்டு புனித சனிக்கிழமை இரவு திருஒளி வழிபாடு, தீ மந்திரித்தல், பாஸ்கா திரி மந்திரித்தல், பாஸ்கா திரிபவனி, பாஸ்கா புகழுரை, இறைவாக்கு வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு, திருமுழுக்கு வாக்குறுதி புதுப்பித்தல் மற்றும் நற்கருணை வழிபாடு நடைபெற்றது. நேற்று காலை உயிர்ப்பு ஞாயிறு பெருவிழாவை யொட்டி திருப்பலி பெரம்பலூர் வட்ட முதன்மை குரு அடைக்கலசாமி தலைமையில் நடந்தது. இதில் பிற திருச்சபையில் பாதிரியார்கள் கிறிஸ்தவ கன்னிகைகள், கிறிஸ்தவ பங்குபேரவையினர் மற்றும் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பாளையத்தில், உள்ள புனித சூசையப்பர் திருத்தலத்தில் ஈஸ்டர் பண்டிகையை யொட்டி பாதிரியார் தலைமையில், பாஸ்கா திருவிழிப்பு திருப்பலி மற்றும் நற்கருணை வழிபாடு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூரில்...
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். அதன்படி அரியலூர் தூய லூர்து அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, நேற்று அதிகாலை பங்குத்தந்தை அந்தோணிசாமி சாலமோன் தலைமையில், சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இதில் அரியலூர், குலமாணிக்கம், சாளைக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் அரியலூர் புதுமார்க்கெட் தெருவிலுள்ள சி.எஸ்.ஐ. தூய ஜார்ஜ் ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
வீதி உலா
அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பெருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நள்ளிரவு பங்கு தந்தை வின்சென்ட் ரோச்மாணிக்கம் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் நிகழ்ச்சியை மையப்படுத்தி அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றது. புதிய நெருப்பிலிருந்து ஒளி பெற்று பாஸ்கா திரி ஏற்றப்பட்டு அனைவரும் மெழுகுவர்த்திகளை ஏற்றி தங்களின் கிறிஸ்துவ வாழ்வின் நம்பிக்கைகளையும் புதுப்பித்து கொண்டார்கள். ஞானஸ்தான கூட்டு நற்செய்தி வழிபாடு என பல நிகழ்வுகள் நடைபெற்றது. திருப்பலிக்கு பின் நேற்று அதிகாலை பல்வேறு மலர்களால் மற்றும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு 5 திருத்தேர்களில் புனித ஆரோக்கியநாதர், புனித சூசையப்பர், புனித அந்தோணியார், புனித அலங்கார மாதா, உயிர்த்த ஏசு ஆகிய திரு உருவங்கள் அமைக்கப்பட்டிருந்த தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story