காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 2 April 2018 10:45 PM GMT (Updated: 2 April 2018 7:40 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மன்னார்குடியில் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி,

உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மேலும் 3 மாதகால அவகாசம் கேட்டுள்ள மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர் சங்கத்தினர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மன்னார்குடி வட்டார லாரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் லாரி உரிமையாளர் சங்க செயலாளர் சாமிநாதன், பொருளாளர் செந்தில்குமார், மன்னார்குடி வர்த்தக சங்க தலைவர் பாரதிஜீவா, செயலாளர் ஆனந்த், லாரி உரிமையாளர் சங்க கவுரவ தலைவர் மணி, துணை தலைவர் சேட்டு கணேசன், துணை செயலாளர் ராஜா, ஆலோசகர் ராஜாராமன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தபால் நிலையத்துக்குள் நுழைய முயன்றதால் போலீசார் தபால் நிலைய கதவை இழுத்துப்பூட்டி போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக லாரி உரிமையாளர் சங்கத்தினர் நகராட்சி அலுவலகம் அருகே இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தபால் நிலையத்திற்கு வந்தனர். 

Next Story