சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு


சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 3 April 2018 4:00 AM IST (Updated: 3 April 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

காளப்பநாயக்கன்பட்டியில் சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேந்தமங்கலம்,

சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி 12-வது வார்டில் தொட்டியப்பட்டி பகுதி உள்ளது. அந்த பகுதிக்கு அங்குள்ள ஆழ்துளை கிணறு மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் வினியோனம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அப்பகுதியில் குடிநீர் வினியோகிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து நேற்று காலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சாலைமறியல்

அப்போது அங்கு வந்த பேரூராட்சி அலுவலர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. இதனால் அவர்கள் அனைவரும் திடீரென காளப்பநாயக்கன்பட்டி ராசிபுரம் மெயின்ரோட்டில் சாலை மறியல் போராட்டம் செய்தனர். இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்.செல்வராஜ் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் விரைவில் தொட்டிப்பட்டி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளிடம் தெரிவித்து ஏற்பாடு செய்வதாக தெரிவித்ததை அடுத்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.


Next Story