கூட்டுறவு சங்க உறுப்பினர் தேர்தலில் மோதல்: ஓட்டுப்பெட்டிகளை உடைத்து, ஆவணங்களுக்கு தீ வைத்து எரிப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர் தேர்தலில் ஓட்டுப்பெட்டிகளை உடைத்து, தேர்தல் ஆவணங்களை தீ வைத்து எரித்தனர். இதனை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர் தேர்தலுக்கான பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி, வேட்பு மனுதாக்கல், மனு வாபஸ் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்தன. இதில் அ.தி.மு.க., தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. ஓட்டுப்பதிவு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. அப்போது அங்கு கும்பலாக வந்த சிலர், தேர்தல் நடக்கும் அறைக்குள் புகுந்து அங்கிருந்த டேபிள், நாற்காலிகள், ஓட்டுப்பெட்டிகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். தொடர்ந்து வாக்குச்சீட்டு உள்ளிட்ட தேர்தல் தொடர்பான ஆவணங்களை கிழித்து தீ வைத்து எரித்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட துணைச்செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் நல்லத்தம்பி, ஜெகதீசன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஆத்தூர்-பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு ஞானசிவக்குமார் தலைமையிலான போலீசார், அங்க வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தி.மு.க.வினர் கூறும்போது, “அ.தி.மு.க. வினர் கலவரத்தை ஏற்படுத்தி தேர்தலை ரத்து செய்துவிட்டு, தங்கள் கட்சியினர் வெற்றி பெற்றதாக அறிவித்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றனர். எனவே தேர்தலை ரத்து செய்யாமல் மீண்டும் நடத்துவோம் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தால் தான் மறியலை கைவிடுவோம்” என்றனர். அதனைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரி மணிமேகலை தேர்தலை ரத்து செய்யாமல் ஒத்திவைப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஆத்தூர்-பெரம்பலூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி, வெங்கனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் அ.தி.மு.க.வினர் தேர்தலை நடத்தவிடாமல் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கும் தேர்தல் நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா காரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்டோர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்க தயாராக இருந்தபோது, அலுவலர்கள் குளறுபடி செய்து விட்டதாகக் கூறி, சிலர் வாக்குச்சாவடி முன்பு அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலை பிடுங்கியும், நாற்காலிகளை தூக்கி எறிந்தும், வாக்குச்சாவடி முன்பு ஒட்டப்பட்டிருந்த வேட்பாளர் பட்டியலை கிழித்தும் ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனால் தி.மு.க. மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் சங்கத்தின் முன்பு திரண்டனர். இதனையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார் தலைமையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அனை வரையும் கலைந்து போகுமாறு கூறிவிட்டு, மறுதேதி குறிப்பிடாமல் தேர்தலை அதிகாரிகள் ஒத்திவைத்தனர்.

Related Tags :
Next Story