ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஒழித்துக்கட்ட சித்தராமையா முயற்சி

ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஒழித்துக்கட்ட சித்தராமையா முயற்சி செய்கிறார் என்று தேவேகவுடா குற்றம்சாட்டினார்.
பெங்களூரு,
முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேவுடா முன்னிலையில் காங்கிரசை சேர்ந்த முன்னணி நிர்வாகி அல்தாப்கான் பெங்களூருவில் நேற்று ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் மூத்த அதிகாரிகள் இருக்கிறார்கள். சட்டசபை தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். அரசின் கட்டுப்பாட்டில் தேர்தல் நடைபெறக்கூடாது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் கடிதம் எழுதுவோம். காங்கிரசை சேர்ந்த அல்தாப்கான் எங்கள் கட்சியில் சேர்ந்துள்ளார். அவரை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.
ஜனதா தளம்(எஸ்) சார்பில் அல்தாப்கான் சாம்ராஜ்பேட்டையில் ஜமீர்அகமதுகானுக்கு எதிராக போட்டியிடுவார். அந்த தொகுதியில் அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் ஜமீர்அகமதுகானுக்கு எதிராக வெறுப்பில் உள்ளனர். அந்த மக்கள் அல்தாப்கானை ஆதரிப்பார்கள். பெங்களூருவில் நவசக்தி தொடங்கியுள்ளது.
ஜமீர்அகமதுகான் எங்கள் கட்சியில் இருந்து வளர்ந்தவர். அவரை பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. சித்தராமையாவை நாங்கள் துணை முதல்-மந்திரி ஆக்கினோம். அவர் எங்கள் கட்சியை விட்டு காங்கிரசுக்கு சென்றார். அங்கு முதல்-மந்திரி ஆகியுள்ளார். ஆயினும் தாய் கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஒழித்துக்கட்ட சித்தராமையா முயற்சி செய்கிறார்.
எங்கள் கட்சியில் இருந்து 7 எம்.எல்.ஏ.க்களை காங்கிரசுக்கு சிலர் இழுத்துவிட்டனர். அவர்களின் பெயர்களை சொல்ல விரும்பவில்லை. அவர்கள் அதிகமாக ஆட்டம் போடுகிறார்கள். இந்த ஆட்டம் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. ஈத்கா மைதான பிரச்சினையை தீர்த்து வைத்தது யார்?. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது யார்?. இதனால் எவ்வளவு பேர் பயன் அடைந்தனர்.
முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த 2 பேரை நாங்கள் மந்திரி ஆக்கினோம். அப்போது சித்தராமையா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சித்தராமையாவின் அரசியல் சாமுண்டீஸ்வரி தொகுதியுடன் நிறைவடையும். ஏப்ரல் 12 மற்றும் 13-ந் தேதி பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் எங்கள் கட்சி மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் அந்த தொகுதியில் போட்டியிடும் கட்சி வேட்பாளரை அறிவிப்போம். இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Related Tags :
Next Story