சென்னை புறநகரில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் மறியல் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சென்னை புறநகரில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்களை நடத்தினர்.
தாம்பரம்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன. அந்த வகையில் சென்னை புறநகரில் பல்வேறு இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மற்றும் ரெயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சென்னையை அடுத்த பல்லாவரம் ரெயில் நிலையத்தில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட தி.மு.க. செயலாளரும் ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தா.மோ. அன்பரசன் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் குரோம்பேட்டை ரெயில் நிலையத்தில் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதி தலைமையில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. ஆகிய கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் தாம்பரம் தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தலைமையில் மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் யாக்கூப், காஞ்சீ வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரூபி மனோகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தாம்பரம் ஒருங்கிணைப்பாளர் சாமுவேல், உள்பட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
தாம்பரம் வக்கீல்கள் சங்க தலைவர் ஸ்ரீராமன் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் தாம்பரம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் மடிப்பாக்கம் கூட்ரோட்டு மேடவாக்கம் மெயின் ரோட்டில் பகுதி செயலாளர் பெருங்குடி ரவிசந்திரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் உள்பட தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஆலந்தூர் தெற்கு பகுதி தி.மு.க. செயலாளர் என்.சந்திரன் தலைமையில் இப்ராகீம் முத்து, ஜெகதீஸ்வரன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சீத்தாபதி, சிக்கந்தர், கனிபாண்டியன், ம.தி.மு.க. செயலாளர் சின்னவன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பழவந்தாங்கல் சுரங்கப்பாதை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் பகுதி செயலாளர் மதியழகன் தலைமையில் அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., பாலவாக்கம் சோமு உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தரமணி பகுதியிலும் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருகம்பாக்கம் தொகுதி தி.மு.க. சார்பில் ஆற்காடு சாலையில், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பகுதி செயலாளர் ராசா உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆற்காடு சாலையில் அமர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர்கள் மருது கணேஷ் மற்றும் எ.டி மணி ஆகியோர் தலைமையில் கொருக்குபேட்டையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் கொருக்குபேட்டை ரெயில் நிலையத்தில், சென்னையில் இருந்து ஆமதாபாத்துக்கு புறப்பட்ட நவஜீவன் எக்ஸ்பிரஸ் உள்பட 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பூர் தொகுதி வடக்கு பகுதி தி.மு.க. செயலாளர் முருகன் தலைமையில் கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பூர் தொகுதி தெற்கு பகுதி தி.மு.க. செயலாளர் ஜெயராமன் மற்றும் மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலை கல்லுகடை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வில்லிவாக்கத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. ரங்கநாதன் தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 500 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்பத்தூர் பகுதியில் தி.மு.க. செயலாளர் ஜோசப் சாமுவேல் தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 400 பேர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அடையாறு டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அலுவலகம் முன்பு தி.மு.க. வேளச்சேரி செயலாளர் மு.ரவி தலைமையில் சுமார் 100 பேர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்ற போது போலீசார் அவர்களை கைது செய்தனர்.
சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சுதர்சனம் தலைமையில் புழல் கேம்ப் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பெண்கள் உட்பட 600-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாதவரம் துணை கமிஷனர் கலைச்செல்வன், புழல் உதவி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் நடராஜ் உள்ளிட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது தி.முக.வினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் புழல் ஒன்றிய செயலாளர் நா.ஜெகதீசன், புழல் ஒன்றிய துணை செயலாளர் தமிழ்ச்செல்வி ரமேஷ் தலைமையில் புழல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.mபின்னர் அவர்கள் புழல் சிறை எதிரே உள்ள சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்குன்றம் நகர தி.மு.க. சார்பில் மாவட்ட முன்னாள் அவைத் தலைவர் என்.எம். துரைசாமி, கா.கு.இலக்கியன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு, பின்னர் செங்குன்றம் ஜி.என்.டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர் பஸ்நிலையம் முன்பு மேற்கு பகுதி செயலாளார் கே.பி.சங்கர் தலைமையில், எம்.எல்.ஏ. கே.பி.பிசாமி, வட்டசெயலாளர் ஆதிகுருசாமி அவைத்தலைவர் ராமநாதன் உள்பட 200-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் அஜாக்ஸ் பஸ்நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் திருவொற்றியூர் தபால் நிலையத்திற்கு பூட்டு போட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மணலியில் மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் மணலி மார்க்கெட் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட அவைத்தலைவர் துரை உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் கோர்ட்டு வக்கீல்கள் திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story