மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டும்
மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டும் என்று வர்த்தகர்களுக்கு தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கார்த்திகைக்கு மிஞ்சிய மழை இல்லை. கர்ணனுக்கு மிஞ்சிய கொடை இல்லை. சுப்ரீம் கோர்ட்டுக்கு மிஞ்சிய தீர்ப்பு இல்லை.
அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத மத்திய அரசினை கண்டித்து வாக்கு வங்கிக்காக அநீதி செய்யும் மோடி அரசை கண்டித்தும் நீதி, நேர்மையை மதியாத மத்திய அரசை கண்டித்தும் 5-ந்தேதி (நாளை) நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் வணிகர்களும் பங்குபெற தி.மு.க. வர்த்தகர் மட்டுமல்லாது, தமிழகத்தின் மொத்த வணிகர்களும் பங்குபெற வேண்டுகிறேன்.
மு.க.ஸ்டாலின் அறிவித்த அதே நாளில், கர்நாடகம் தமிழக எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அறிவித்து இருக்கிறது. இதில் இருந்து தமிழகத்தின் பெரிய குரலாக மு.க.ஸ்டாலின் குரலைத்தான் கர்நாடகக்காரர்கள் நினைக்கிறார்கள் என்பது புரிகிறது.
ஆதலால் 5-ந்தேதியன்று சிதறிக்கிடக்கும் தமிழ் மாநில உணர்வுகளை காட்டிட சிறந்தநாள். காவிரி பிரச்சினையில் தி.மு.க. கூட்டணி என்று இல்லாது, தனித்து செயல்பட்டாலும், ‘நோக்கமும், எடுத்து செல்லும் தலைமையும் சிறந்தது என்பதால் பா.ம.க., எஸ்.டி.பி.ஐ. ஆதரிக்கிறது.
மத்திய-மாநில ஆட்சியினரின் தேசத்துரோகத்தை வீழ்த்தவும், மாநிலத்தின் இரட்டை ஆட்சிக்கு முடிவுகட்டவும் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று வர்த்தகர்கள் 5-ந்தேதி(நாளை) நடக்கும் பொது முழு அடைப்பு போராட்டம் நடத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story