பலத்த மழை: குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
பலத்த மழை காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை முதல் மதியம் வரை வெயில் சுட்டெரித்தது. அதன் பின்னர் மேகமூட்டமாக காட்சி அளித்தது.
தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக உருவெடுத்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டியது. மழையின் காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம், கே.என்.ஆர்.நகர் ஆகிய இடங்களில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்தன.
இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று சாலையில் விழுந்த மரங்களை மின்வாள் கொண்டு வெட்டி அகற்றினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின் போக்குவரத்து சீரானது. அதே போன்று குன்னூர் டால்பின்நோஸ் சுற்றுலா தளம் செல்லும் சாலையில் கரன்சி அருகே சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை தீயணைப்பு துறையினர் அகற்றினர்.
குன்னூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் ராஜாஜி நகர் குடியிருப்பு பகுதியை மழைநீர் சூழ்ந்தது. ராஜாஜி நகரில் 10 வீடுகளுக்கு மழைநீர் புகுந்தது. இதனால் வீடுகளுக்குள் சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். சம்பவ இடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் வராததால் பொதுமக்களே மழைநீரை அப்புறப்படுத்தினர்.

Related Tags :
Next Story