காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: மார்த்தாண்டம், குலசேகரம் பகுதிகளில் கடைகள் அடைப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மார்த்தாண்டம், குலசேகரம் பகுதிகளில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
குழித்துறை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் கடைகள் அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று குமரி மாவட்டத்தில் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
நாகர்கோவில் கோட்டார் சந்தை பகுதியில் உள்ள பல கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. ஒருசில கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன. இதனால் கோட்டார் பகுதியில் பரபரப்பு இன்றி வெறிச்சோடி கிடந்தது.
அதேநேரத்தில் நகரின் மற்ற பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. வடசேரி, பறக்கை உள்ளிட்ட பகுதிகளில் சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டு இருந்தன.
மார்த்தாண்டத்தில் பெரும்பாலான வியாபாரிகள் கடைகளை அடைத்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். குறிப்பாக மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலை, சி.எஸ்.ஐ. வணிக வளாகம் போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மார்க்கெட் ரோடு, வடக்குத்தெரு சாலை, பம்மம் போன்ற பகுதிகளில் சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தக்கலை பகுதியில் மேட்டுக்கடை, பழைய பஸ் நிலையம் சந்திப்பு, பஸ் நிலையம் போன்ற பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை பல கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மதியம் ஒன்றிரண்டு கடைகள் திறந்தன. அதன்பின்பு, பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.
குலசேகரம் பகுதியில் பெரும்பாலான வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக குலசேகரம் கான்வென்ட், சந்தை சந்திப்பு, நாகக்கோடு, செருப்பாலூர், அரசமூடு போன்ற பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள், பர்னிச்சர் கடைகள், ஜூவல்லரிகள், ஸ்டூடியோக்கள் போன்றவை அடைக்கப்பட்டிருந்தன.
கருங்கல் பகுதியில் ஒருசில வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Related Tags :
Next Story